TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள நமது 40,000 துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு “குட் நியூஸ்” – முழு விவரம்

சிங்கப்பூரிக் நமது துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில், நமது துப்புரவுத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக துப்புரவு பணியாளர்களுக்கான முத்தரப்பு கிளஸ்டரின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1,500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் 40,000 தொழிலாளர்கள் 2023 முதல் 2029 வரை ஆண்டு ஊதிய உயர்வால் பயனடைகிறார்கள். மேலும் அவர்களின் பணிக்கு சிறந்த முறையில் தயார்படுத்த கட்டாய பயிற்சி தேவைகளை மேம்படுத்தியுள்ளனர் என்பதும் நினைவுகூரத்தக்கது. இதன் மூலம் துப்புரவு தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 170 முதல் 265 வெள்ளி வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 2020 முதல் தகுதி பெறும் எல்லா துப்புரவுபணியாளர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் இரண்டு வாரங்களுக்கு குறையாமல் PWM போனசை பெறுவார்கள். PWM போனஸ் கிடைக்கப்படும் போது துப்புரவாளர் ஒரே முதலாளிக்கு குறைந்தது 12 மாதங்களாவது பணிசெய்திருக்க வேண்டும். படிப்படியாக உயிரும் ஊதிய முறையின் வழி ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை மேற்படாமலும் போனஸ் கொடுக்கப்படவேண்டும்.

துப்புரவாளர் தன் சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்யும்போதோ அல்லது தவறான நடவடிக்கையின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படும்போத PWM போனஸ் பெற தகுதி பெறமாட்டார். மேலும் 2022 முதல் துப்புரவாளர்களுக்கு ஒரு கட்டாய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பாடப் பயிற்சி தொகுப்பு மற்றும் ஒரு பிரதான பாடப் பயிற்சி தொகுப்பு பயிற்சி பெற வேண்டும்.

மேலும் அவர்களின் பணிக்கு ஏற்ப சம்பள உயர்வும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது குறித்த தெளிவான தகவல்களை தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகி உள்ளது.

Related posts