சிங்கப்பூரில் இன்று (ஜூலை 22) செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் மாணவர் ஒருவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அந்த கல்வி நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11.40 மணியளவில் மால்கம் சாலையில் உள்ள பள்ளியில் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
“ஒரு இளைஞன் உயரத்தில் இருந்து விழுந்துவிட்டான், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது அவன் சுயநினைவோடு தான் இருந்தான்” என்று போலீசார் தெரிவித்தனர், மேலும் அந்த மாணவன் எவ்வாறு உயரத்தில் இருந்து விழுந்தான் என்பதை குறித்து விசாரணை நடந்து வருகின்றது.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதால், பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை கட்டாயம் பள்ளி பாதுகாக்கும் என்று என்று டாக்டர் டேங்கர் கூறினார்.
இந்த நிகழ்வு குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எங்கும் பகிரப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய பெற்றோரிடம் கோரிக்கை விடுத்தார். தற்போது அந்த இளைஞர் மருத்துவமனையியல் சிகிச்சை பெற்று வருகின்றார்.