கடந்த 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியரான சுரேஷ் குமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
2019ம் ஆண்டு நடந்து என்ன?
சிங்கையின் “ஒன் ராஃபிள்ஸ் பிளேஸில்” சுத்தம் செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் தங்கள் கோண்டோலாவை (பணியாளர்களை உயரத்தில் ஏற்றி இறக்க பயன்படும் ஒரு கருவி) அந்த 63 மாடி கொண்ட பாரின் கூரையில் இருந்து இறக்கி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற பணிகள், நிறுவனங்கள் இயங்காத நேரத்தில் தான் செய்யப்படும். காரணம் பாதையில் உள்ள சில பகுதிகளை அகற்றிவிட்டு தான் இந்த பணிகளை மேற்கொள்ள முடியும். அப்படி கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சுரேஷ் குமார்சண்முகம் என்பவருடைய தலைமையில் பணிகள் நடந்து வந்துள்ளது. ஆனால் பணிகளை முடித்த பிறகு தரையில் இருந்த Slab ஒன்றை மீண்டும் பொறுத்தாமலேயே சென்றுள்ளனர் சுத்தம் செய்தவர்கள்.
அப்போது அங்கு பணியில் இருந்த பகுதிநேர காவலாளியான 26 வயதான ஷான் துங் முன் ஹான், 1-ஆல்டிடியூட் ரூஃப்டாப் பாருக்கு அருகிலுள்ள குழியில் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஷான் துங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தியருக்கு சிறை
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சுமார் 6 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை 15 அன்று, தற்போது வேலையில்லாமல் இருக்கும் 63 வயதான சுரேஷ், மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் துங்கின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருந்த நிலையில் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது குற்றத்தை சுரேஷ் ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிங்கை NTUC & PWAs சங்கங்களுடன் MOM கலந்தாய்வு – வெளிநாட்டு ஊழியர்கள் மீது புகார்!
மனிதவள அமைச்சக வழக்கறிஞர்கள் மெல்வின் லோ மற்றும் நூர் இஷாமீனா ஆகியோர் நீதிமன்ற ஆவணங்களில், குற்றம் நடந்த நேரத்தில், உணவகம் மற்றும் பார் ஆபரேட்டர் சினெர்ஜின்தெஸ்கி 1-ஆல்டிடியூட் ரூஃப்டாப் பாரை நடத்தி வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.