TamilSaaga

“சிங்கப்பூர் Star Vista Mall” : தடதடவென வந்திறங்கிய SAF ஹெலிகாப்டர்கள் – தூள் கிளப்பிய Counter-Terrorism அட்டாக்

சிங்கப்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மாலில் வழக்கமான கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்ட நேரமது, அதேபோல ஏற்கனவே புவானா விஸ்டா MRT நிலையத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் அலுவலகங்கள் நாள் முழுவதும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 7) இரவு 10 மணிக்கு சற்று முன்பாக, அப்பகுதியில் ஹெலிகாப்டர்களின் சத்தம் நெருக்கி வருவதை உணர முடிந்தது. தூரத்தில் கேட்ட ரோட்டர்களின் சத்தம் தொடர்ந்து மிக அருகில் கேட்க துவங்கியது.

சிங்கப்பூர் பேருந்து மற்றும் MRT நிலையங்களில் உள்ள சுவரோவியங்கள் எதற்கு? – யாருக்கெல்லாம் இது உதவும்?

யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று, சிங்கப்பூர்க் குடியரசின் விமானப்படையிலிருந்து இரண்டு H225M ஹெலிகாப்டர்கள் தீவின் வடக்குப் பகுதியில் இருந்து ஸ்டார் விஸ்டா மால் மீது இறங்க வந்துகொண்டிருந்தன. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட பிறகு, சிங்கப்பூர் சிறப்புப் படைகளின் பயிற்சிக்கு நடுத்தர லிப்ட் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதை தற்போது தான் முதன்முறையாகப் பார்த்தனர் நிருபர்கள். அதன் விளக்குகளை அணைத்தபடி முதல் ஹெலிகாப்டர் Stealth மோடில் மாலுக்கு மேலே வட்டமிட்டது.

இருண்ட இரவை கொண்ட வானத்தின் பின்னணியில், ஹெலிகாப்டரில் இருந்து வேகமாக கீழே இறங்கி 15 மாடி கட்டிடத்தின் மேல் விரைவாக செல்லும் வீரர்களின் கால்தடம் அரிதாகவே காணப்பட்டன.

துருப்புக்களின் சரக்குகளை இறக்கிய பிறகு, முதல் ஹெலிகாப்டர் சட்ரென்று ஒரு திருப்பத்தை மேற்கொண்டு அங்கிருந்து புறப்பட இரண்டாவது ஹெலிகாப்டர் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களும் தங்கள் பணியாளர்களை இறக்கிவிட்டு, அவர்கள் வந்த அதே திசையில் பறந்து சென்றது.

நீங்கள் “வைரஸ் குடும்பம்” : சிங்கப்பூரில் செவிலியரை புண்படுத்திய அண்டை வீட்டார் – நீதிபதி சொன்ன பளார் பதில்!

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் (SAF) சிறப்பு அதிரடிப் படையின் தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியானது, SAFன் செயல்பாட்டுத் தயார்நிலையைச் சோதிப்பது மற்றும் அச்சுறுத்தல்களின்போது அதன் வேகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) தெரிவித்துள்ளது. பணயக்கைதிகளை காப்பாற்றும் சூழ்நிலைக்கு பதிலளிப்பதற்கும், நகர்ப்புற அமைப்பிற்குள் அச்சுறுத்தல்களை விரைவாக சமாளிக்க படைகளின் செய்முறை பயிற்சிக்கும் இது நடத்தப்பட்டது. இந்த வணிக வளாகத்திற்குள் நடந்த பயிற்சியைப் பார்க்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts