TamilSaaga

விதியை மீறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.. முதலாளிகளுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா ?

பல்துறைகளை சேர்ந்த பல நாட்டு தொழிலாளர்கள் நமது சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். சிங்கப்பூரின் வளர்ச்சியில் அவர்களுடைய பங்கு என்பதும் மிகவும் மதிக்கத்தக்கது. சிங்கப்பூரை பொறுத்தவரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என்று பல சட்டதிட்டங்கள் உள்ளது

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்றும் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது சிங்கப்பூர் அரசு. மேலும் அந்த சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது.

இந்த சூழலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் சிங்கப்பூர் முதலாளிகளுக்கும் அவர்களது பணிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சில விதிகள்

விதி ஒன்று : சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டாயமாக ஒரு முதலாளியிடம் மட்டுமே வேலை செய்ய வேண்டும்.

விதி இரண்டு : ஒரு முதலாளியிடம் வேளை செய்யும்போது, அவர்கள் வேறொரு முதலாளியிடமோ அல்லது தனியாக வியாபாரமோ செய்யக்கூடாது.

விளைவுகள் : சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட விதிகளை மீறும்பட்சத்தில் வேலையிழக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்கள் சிங்கப்பூரில் இருந்தே தடை செய்யப்படலாம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளுக்கான அறிவுரை

தங்களிடம் வேலை செய்யும் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளர் பிற இடங்களில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது. அப்படி செய்ய அனுமதிக்கும்பட்சத்தில் அவருக்கு 8000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related posts