சிங்கப்பூரில் COVID-19 வழக்குகள் அதிகரித்து வருவதால், ஏற்கனவே திருத்தப்பட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளின் தொடக்கத் தேதியை சுகாதார அமைச்சகம் (MOH) ஒத்திவைத்துள்ளதாக இன்று வியாழன் (பிப்ரவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் கோவிட்-19 Multi Ministry Task Force (MTF) கடந்த வாரம் ஏற்கனவே இருக்கும் விதிகளை இரண்டு கட்டங்களாக எளிமையாக்கி நெறிப்படுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது, அதில் முதலாவது கட்ட தளர்வுகள் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) தொடங்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தளர்வுகள் அளிக்கப்படாத நிலையில் புதிய தேதி “விரைவில்” அறிவிக்கப்படும் என்று கூறிய MOH, தற்போது சிங்கப்பூரில் அமலில் உள்ள பழைய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் கூறியது. “அன்றாட நிகழ்வுகளின் தற்போதைய எழுச்சி மற்றும் பல்வேறு அமைப்புகளில் விரிவான விதிகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள விரிவான வேலைகளைக் கருத்தில் கொண்டு, MTF இந்த விஷயத்தை மதிப்பாய்வு செய்துள்ளது மற்றும் அதற்கு பதிலாக ஒரே நேரத்தில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த முடிவு செய்துள்ளது.” என்றும் MOH கூறியது.
சிங்கப்பூர் தற்போது COVID-19 எழுச்சியின் மத்தியில் உள்ளது, கடந்த செவ்வாயன்று தினசரி 26,032 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. புதிய COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை நேற்று புதன்கிழமை 20,312 ஆக குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொற்று அளவில் தீடீர் அதிகரிப்பு இருக்கும் வேளையில் நிச்சயம் தளர்வுகளை அறிவிக்கும் நேரத்தை மாற்றியமைப்பதே சிறந்தது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்படவிருந்த நிலையில் மீண்டும் தளர்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள்ளது. மக்களும் விழிப்புடன் இருந்து பெருந்தொற்றை முற்றிலும் ஒழிக்க அரசுக்கு உதவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல இந்த தொற்று அதிகரிப்பால் தற்போது வரை VTL சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.