TamilSaaga

“சிங்கப்பூர் இதுவரை காணாத மிகப்பெரிய கியூ.. தள்ளுமுள்ளு, போட்டாபோட்டி என்று முண்டியடித்த மக்கள்” – Branding மேலிருந்த உச்சக்கட்ட மோகம்!

சிங்கப்பூரர்களுக்கு வரிசையில் நின்று பொருட்களை வாங்குவது என்பது கைவந்த கலை என்றே கூறலாம். வரிசையில் நின்று உணவுகளை வாங்குவதிலிருந்து புதிய பொருட்கள் சந்தைக்கு வரும்போது அவற்றை முதல் நாளே மிகப்பெரிய வரிசையில் நின்று வாங்குவது வரை நமது சிங்கப்பூரர்களுக்கு எல்லாமே சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் தான்.

சிங்கப்பூரில் 67 வயதில் விந்து விரைவில் வெளியேறுவதைத் தடுக்க… S$17,000 பணத்தை வாரி இறைத்து ஏமாந்த முதியவர் – இளைஞர்களுக்கு அட்வைஸ்

ஆனால் சிங்கையில் கடந்த வாரம் நடந்த Omega x Swatch MoonSwatch Collaboration வெளியீட்டில் (Omega மற்றும் Swatch நிறுவனம் இணைந்து வெளியிட்ட வாட்ச்), காத்திருந்து வாட்ச் வாங்க நின்ற மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சலசலப்பு பலரை திடுக்கிட வைத்துள்ளது. வாட்ச் சேகரிக்கும் பழக்கம் உள்ளவாக்ரள் இந்த 11 வகை மடல்களில் மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்களிலும் வண்ணங்களிலும் கொண்ட இந்த வாட்ச்களை வாங்க குவிந்தனர்.

இறுதியில் இந்த கூட்டநெரிசலில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாகவும் தள்ளுமுள்ளு காரணமாகவும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கூட்டத்தில் சிலர் போலீசாரை எதிர்த்து கோஷமிட்டது திகிலூட்டியது என்று தான் கூறவேண்டும். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலக அளவில் பல நாடுகளில் இந்த வாட்ச் வெளியீட்டின்போது பல இடங்களில் கூச்சல் குழம்பம் ஏற்பட்டுள்ளது, எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று லண்டன் நகரின் ஒரு பகுதியில் நடந்த வாட்ச் விற்பனை கூட்டத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ச் விற்பனையே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சரி நமது சிங்கப்பூர் உள்பட உலக அளவில் பல நாடுகளில் இந்த குறிப்பிட்ட வாட்ச் விற்பனை ஏன் இந்த அளவுக்கு கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது?. கடிகாரத்துறையில் மிகவும் அரிதான வகையில் நடக்கும் Collaborationகளில் இதுவும் ஒன்றாக பார்க்கபடுக்கப்படுகிறது. பிரபல Omega மற்றும் Swatch ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த வாட்சை வெளியிட்டதும் அதற்கு அளிக்கப்பட்ட தள்ளுபடியும் தான் மக்கள் இந்த அளவில் கூடுவதற்கு முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.

MoonSwatch நிறுவன கைக்கெடிகாரங்கள் பொதுவாக 9000 வெள்ளி வரை விற்பனை செய்யப்படுவதுண்டு, ஆனால் கிரகங்களின் பெயர்களை கொண்ட இந்த 11 வெவ்வேறு ஸ்வாட்ச் மாடல்களை உள்ளடக்கிய கடிகாரங்கள் ஒவ்வொன்றும் S$372 விலையில் சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்ததும் பெருமளவில் மக்கள் கூட்டத்தை ஈர்த்ததற்கு ஒரு காரணம்.

சிங்கப்பூர் மலேசிய எல்லை.. சாலை நடுவே முழங்காலிட்டு, கண்ணீர் மல்க தாய் மண்ணை வணங்கிய மலேசியர் – இரண்டாண்டு ஏக்கம் தீர்ந்தது!

சிங்கப்பூர் உள்பட உலக அளவில், இந்த வாட்ச்கள் விற்பனைக்கு வந்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் Swatch நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த வாட்ச்கள் லிமிடெட் எடிஷன் அல்ல என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்வாட்ச் கடைகளில் வரும் வாரங்களில் இவை மீண்டும் விற்பனைக்கு வரும் என்றும் கூறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள வாட்ச் விரும்பிகள் மீண்டும் இந்த வாட்ச்களை பெற வாய்ப்பு கிடைக்குமென்று காத்திருக்கின்றனர்.

யாரும் எதிர்பாராத இந்த Swatch மற்றும் Omega இடையேயான கூட்டமைப்பு நடப்பது இதுவே முதல் முறையாகும். இரு நிறுவனங்களுமே உலக அளவில் வாட்ச் தயாரிப்பில் சிறந்தவை என்பதால் இதுபோன்ற மேலும் பல படைப்புகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts