TamilSaaga

சிங்கப்பூரில் ரமதான் சந்தை: புதிய நிகழ்ச்சிகளுடன் Kampong Gelam-ல் பிரம்மாண்ட துவக்கம்!!!

புனித ரமதான் மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான Gemilang Kampong Gelam சந்தை இவ்வாண்டு 19 பிப்ரவரி முதல் 25 மார்ச் வரை நடைபெறுகிறது. கம்போங் கிளாம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சந்தை, மொத்தம் 35 நாட்கள் மக்களை கவரும் நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு, ரமதான் சந்தை உணவுப் பொருட்கள், கலைச்சார்ந்த பொருட்கள், கலாச்சார நிகழ்வுகள், மற்றும் ஊர்வலங்களால் மாறுபட்ட அனுபவங்களை வழங்கும். இரவுகள் தோறும் விளக்குகளின் அலங்காரம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் வரும் பார்வையாளர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் 60-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், முதன்முறையாக, பார்வையாளர்கள் பல்வேறு புதிய அனுபவங்களை அனுபவிக்கலாம். அவற்றில் போதைப் பொருள் இல்லாத விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட Kampong Charity Run 2025 குறிப்பிடத்தக்கது. அத்துடன், இரண்டு மணி நேர கம்போங் கெலாம் சுற்றுலாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள் மஸ்ஜித் சுல்தான் உட்பட கம்போங் கெலாமின் வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை கண்டாஹார் தெரு வழியாக ஆராயலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரின் Gemilang Kampong Gelam ரமதான் சந்தை இவ்வாண்டு பல புதிய நிகழ்ச்சிகளுடன் சிறப்பமாக நடைபெற உள்ளது. முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவற்றில், மிஸ்டரி டிரெஷர் ஹண்ட் (Mystery Treasure Hunt) முக்கியமானது. இதில் பங்கேற்பாளர்கள் எஸ்ஜி$8,000 வரை பணத்தை வெல்லும் வாய்ப்பு பெறுவர்.

அதேபோல், வருகையாளர்களுக்கு கம்போங் கிளாமை ஆராயும் பயணத்தில் ஸ்டாம்ப் ராலி (Stamp Rally) நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு இடங்களில் ஸ்டாம்புகளை சேகரித்து மொத்த அனுபவத்தை நினைவாக வைத்துக்கொள்ளலாம்.

இந்த புதிய மற்றும் திருவிழாக் நிகழ்ச்சிகளுடன், ரமதான் சந்தை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அழகான தருணங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 19 பிப்ரவரி முதல் 25 மார்ச் வரை, கம்போங் கிளாமில் நடைபெறும் இந்த புனித மாத சந்தையை ம misses செய்யாதீர்கள்! மார்ச் 22-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு, கம்போங் கெலாம் அதன் வருடாந்திர கூட்டு இஃப்தார் நிகழ்வை அரேபியன் தெருவில் நடத்தவுள்ளது. இதில் 1,000 பேர் ஒன்றுகூடி நோன்பு துறப்பார்கள்.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

 

Related posts