சிங்கையில் வேலை செய்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பலரும் தங்களுடைய வாழ்க்கையை தொடங்க தினமும் இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நீங்களும் சிங்கப்பூரில் வேலை செய்ய செல்லலாம் என நினைத்தால் முதலில் இந்த பதிவினை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெளிநாடு வேலைக்கு செல்ல நினைக்கும் போது முதல் படி உங்க பாஸ்போர்ட் தான் அதை சரியாக வைத்து கொள்ளுங்கள். இல்லாதவர்கள் அதை முதலில் அப்ளே செய்து வாங்கி கொள்ளுங்கள். அடுத்து ஒரு ஏஜென்ட்டினை தேடுங்கள். அவர்களை சரியாக தேர்வு செய்யுங்கள். முகநூலில் பார்த்தோ விளம்பரங்களை வைத்தோ முடிவு செய்ய வேண்டாம்.
இதையும் படிங்க: இந்திய லைசன்ஸ் இருக்கா? அப்போ இந்த துறையில் டிரைவர் வேலை கிடைக்கும்? தரமான சம்பளம்.. சிங்கப்பூரில் லைசன்ஸ் எடுக்க தேவையில்லை!
தெரிந்தவர்களை தேர்வு செய்வது தான் நல்லது. இல்லை எனக்கு யாரையும் தெரியாது என்பவர்கள் தீர விசாரியுங்கள். ஒரு ஏஜென்ட்டினை அணுகுவதற்கு முன்னரே இப்போதைய டிஜிட்டல் காலத்தில் அவர் குறித்து சரியாக கணிக்க முயற்சி செய்யுங்கள். அப்படி ஒருவரை தேர்வு செய்தாகி விட்டது.
ஏஜென்ட்டிடம் வேலையை பார்க்க சொல்லி பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது முடிந்தவரை உங்க துறையில் ஒரு வேலையை தேட சொல்லுங்கள். நீங்க எதுவும் வேலை எனக் கூறினால் சிக்கலான இடத்தில் கூட உங்களை மாட்டி விடுவார்கள். அவர்கள் பார்த்து சொல்லும் கம்பெனி குறித்து தீர விசாரித்து ஒகே சொல்லுங்கள்.
கூகுளில் படித்து தெரிந்து கொள்ளலாம். இல்லை அந்த ஏஜென்ட்டிடமே கம்பெனியில் வேலை பார்க்கும் ஆட்கள் தெரிந்தவர்களா எனக் கேட்டாலே அவர்கள் கூறும் பதிலை வைத்தே நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். முக்கியமாக IPAல் கொடுக்கப்பட்டு இருக்கும் வேலை தான் நீங்க பார்க்க வைக்கப்படுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் 3 நாட்கள் வேலை… பலமான விடுமுறை… பக்காவா $2000 சம்பளம்… அட என்னப்பா வேல அதுனு கேக்குறீங்களா?
கடனை வாங்கி லட்சக்கணக்கில் கொடுத்து விட்டு வேலைக்காக வந்தது என்னவோ அந்த சம்பளத்திற்கு தான். அதையுமே தீர விசாரியுங்கள். பிடித்தம் இருக்குமா என்பதை குறித்தும் கேளுங்கள். மேலும், IPAல் கொடுக்கப்பட்டு இருக்கும் சம்பளம் தான் கொடுக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் போய் கூட கொடுப்பார்கள் எனக் கூறினால் நம்ப வேண்டாம்.
ஊழியர்கள் வேலைக்காக சிங்கப்பூர் வரும் போது பெரும்பாலும் dormitoryல் தங்க வைக்கப்படுவார்கள். ஸ்கில் ஊழியர்களை தவிர மற்ற பாஸில் வரும் ஊழியர்களுக்கு பிடித்தம் இருக்கும். SPass ஊழியர்கள் தங்க இடம் தனியாக தேட வேண்டும். இதையுமே ஏஜென்ட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இண்டெர்வியூ நடக்கும் போது அது குறித்து கேட்டு கொள்வது நல்லது.
மேலும் சிங்கப்பூரில் சம்பளத்தினை மட்டும் வைத்து எதுவுமே செய்ய முடியாது. ஓவர் டைம் வேலை இருந்தால் மட்டுமே சம்பாரிக்க முடியும். இதனால் நீங்க செல்ல இருக்கும் வேலைக்கு ஓவர் டைம் இருக்குமா எந்த வகையில் அதற்கு சம்பளம் கொடுப்பார்கள் என்பதையுமே தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் கணிசமான தொகையை உங்களால் எடுக்க முடியும்.
முக்கியமாக இதை பின்பற்றுங்கள். SPass அல்லது EPassஐ தவிர மற்ற பாஸில் சிங்கப்பூர் வர இருக்கும் நீங்க ஏஜென்ட்டுக்கு முன்பணமாக எதையுமே கொடுக்காதீர்கள். அப்படி கொடுக்கவும் கூடாது. விசா கிடைத்தவுடன் அவர்கள் கேட்ட பணத்தினை கொடுக்கலாம். மேலும், அவர்களுக்கு mom அறிவுறுத்தலின்படி ஒரு ஊழியரின் இரண்டு மாத சம்பளம் மட்டுமே கட்டணமாக கொடுக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் ஏஜென்ட்டுக்கு தான் இந்த அறிவுரை. இந்திய ஏஜென்ட் வேறு இருப்பதால் அவர்கள் கேட்கும் கட்டணத்தில் குறைக்க பேசி பாருங்கள். முடிந்தவரை குறைக்கும் போது உங்களுக்கும் கடன் சுமை சற்று குறையும்.