TamilSaaga

பட்டப்பகல்லையே இப்படியா? சிங்கப்பூரில் சாலை ஓரத்தில் தூங்கிய பூனையை விழுங்கிய மலைப்பாம்பு!

Reticulated pythons வகை மலைப்பாம்புகளை சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்டவை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், இவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த மலைப்பாம்பு இனமாகும்.

மற்ற வகை மலைப்பாம்புகளை போல இவைகளும் விஷமற்றவை தான். ஆனால், அதிக உயரம், உடல் எடை கொண்ட மனிதர்களை கூட சர்வசாதாரணமாக விழுங்கும் தன்மை கொண்டவை.

1801-ம் ஆண்டு ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹான் காட்லோப் தியானஸ் ஷ்னைடர் என்பவர் தான் இந்த வகை மலைப்பாம்புகள் இருப்பதை உலகிற்கே அறிமுகம் செய்தார். சிங்கப்பூரில் இந்த மலைப்பாம்புகள் குறிப்பாக நகர்ப்புறங்களில் கூட அவ்வப்போது காண முடியும் என்பது தான் பகீர் உண்மை.

மேலும் படிக்க – ‘சோதனை மேல் சோதனை’.. சிங்கப்பூரில் தமிழ் மொழி பயன்பாடு குறைவு – வீட்டுல கூட தமிழ்-ல பேசலைனா எப்படி?

இந்நிலையில், தற்போது முகநூல் பக்கங்களில் ஒரு வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், சிங்கப்பூரின் Boon Lay பகுதியில் சாலை ஓரத்தில் பூனை (Community Cat) ஒன்று படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

அப்போது அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று அந்த பூனையை அப்படியே சுருட்டி, நசுக்கி விழுங்க அதை அருகிலிருந்து சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இதில் பூனை பரிதாபமாக இறந்து போனது. எனினும், அந்த மலைப்பாம்பு என்ன நினைத்ததோ தெரியாவில்லை. முக்கால்வாசி முழுங்கிய பிறகு, திடீரென பூனையை துப்பிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

பிறகு சம்பவம் இடத்திற்கு வந்த Animal & Veterinary Service (AVS) ஊழியர்கள், பூனையின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

வீடியோவை முழுமையாக பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts