TamilSaaga

“புங்கோல் பகுதியில் இறந்த 54 வயது தொழிலாளி” : நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திய MOM

சிங்கப்பூரில் நேற்று, பிஎல்க் 623 C புங்கோல் சென்ட்ரலில் உள்ள ஒரு மத்திய குப்பைத்தொட்டி காம்பாக்டர் அறையின் பிளாக் கிளீனர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய பெயர் லீ என்று ஊடக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) நேற்று அக்டோபர் 16ம் தேதி காலை 8:15 மணியளவில் பிளாக் 623C புங்கோல் சென்ட்ரலில் இருந்து உதவிக்கான அழைப்பு குறித்து எச்சரிக்கப்பட்டதாகக் கூறியது.

போலீசார் மற்றும் SCDF படையினர் அந்த இடத்திற்கு வந்தபோது 54 வயதான அந்த நபர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அசைவில்லாமல் கிடந்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளில்யிட்ட தகவலின்படி மத்திய குப்பைத் தொட்டியில் கழிவு கம்பாக்க்டரின் கதவு மற்றும் வெளியேற்றும் outlet ஆகிய இடங்களுக்கு இடையே அண்ட் தொழிலாளி சிக்கியிருந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த லீ, லியான் செங் கான்ட்ராக்ட்டால் வேலைக்கு சேர்க்கப்பட்டார் என்று அது மேலும் கூறியது.

மத்திய குப்பைத் தொட்டிகளுக்கான அணுகல் மற்றும் கழிவுத் தொகுப்பிகளின் செயல்பாட்டை உள்ளடக்கிய அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு MOM அந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் MOM ஆல் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அக்டோபர் 16 அன்று பேஸ்புக் பதிவில், பாசிர் ரிஸ்-புங்கோல் டவுன் கவுன்சிலின் தலைவர் ஷரேல் தாஹா கூறுகையில் லீ ஒரு “முன்மாதிரியான தொழிலாளி” என்று கூறினார். லீ தனது சகாக்கள் மற்றும் குடியிருப்பாளர்களால் மிகவும் விரும்பப்பட்டவர் என்றும் அவர் கூறினார்.

Related posts