TamilSaaga

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களில்….. கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

Chinese New Year 2025: இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு ஜனவரி 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது! உலகின் பல பகுதிகளில் வாழும் சீனர்கள் மற்றும் சீனக் கலாச்சாரத்தை விரும்பும் மக்கள் இந்த பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். பல்வேறு இனத்தவரும் மதத்தவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த விழா, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. சிங்கப்பூரின் சீன நகரம், சீனப் புத்தாண்டின் போது மிகவும் களை கட்டும் இடமாக இருக்கும். வண்ணமயமான விளக்குகள், பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திக்கவும், பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்வார்கள். இந்த கூட்டத்தை சமாளிக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் விழாக்காலத்தில் உற்றார் உறவினர்களுடன் ஒன்றுகூடுதல் மற்றும் வெளியூர் பயணங்கள் மூலம் Human Metapneumovirus (HMPV) மற்றும் COVID-19 போன்ற கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது அத்தியாவசியமாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் COVID-19 நோயால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 83 ஆகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைப் பற்றி சுகாதார வல்லுநர்கள் COVID-19 மற்றும் Human Metapneumovirus (HMPV) போன்ற வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு கேட்டுக்கொள்கிறார்கள். இளம் பிள்ளைகளும், மூத்தோரும், குறைந்த நோய் எதிர்ப்புச்சக்தி கொண்டவர்களும் இந்த தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் போடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்தவும். உடல்நலக்குறைவு இருந்தால் வெளியே செல்ல வேண்டாம். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் செல்லும்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பை அதிகரிக்கும். சுகாதாரத்துறை ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம். அவர்களது அன்புக்குரியவர்களும் அவ்வாறு செய்யவேண்டும்.

நோய்க்கிருமிகளின் பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் அசோக் குருப்புடன் (Asok Kurup) கூறியவை:

  1. அடிக்கடி கைகளை கழுவுவது – சோப்புடன் கைகளை முறையாக சுத்தம் செய்வது கிருமிகளை நீக்க உதவும்.
  2. தும்மும்போதும், இருமும்போதும் முகத்தைத் தொடாமல் இருப்பது – நோய்க்கிருமிகள் முகம் மற்றும் மூக்கின் வழியாக உடலுக்குள் செல்வதைத் தடுக்கும்.
  3. கை சுத்திகரிப்புத் திரவம் பயன்படுத்துவது – வெளியிடங்களில் செல்வதற்கான பாதுகாப்பான நடவடிக்கையாக இது செயல்படுகிறது.

இவை பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய அவசியமான வழிமுறைகள் ஆகும். சமூகத்தின் பாதுகாப்பிற்காக அனைவரும் இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்….ரயில் மற்றும் பேருந்து சேவைகள் மாற்றம் SBS அறிவிப்பு

Related posts