சிங்கப்பூரில் பாலர் பள்ளியில் சமையல்காரராகப் பணிபுரிந்தபோது, 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளம் குறித்த தகவல்களை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அவருடைய பெயர் மற்றும் மற்ற தகவல்களை வெளியிட்டுள்ளது சிங்கை நீதிமன்றம். பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பாதுகாக்க அவர்களுடைய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியின் பெயர் மற்றும் பிற தகவல்களை GAG என்ற விதி மூலம் சிங்கப்பூர் அரசு வெளியிடாது.
60 வயதான தியோ குவான் ஹுவாட் கடந்த 2023ம் ஆண்டு மே மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையில் செய்த தவறுக்காக அவர் மீது 8 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாலர் பள்ளியில் சமயற்கலைஞராக பணியாற்றிய அந்த நபர் ஒரு 2 இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். அவருடைய குற்றங்கள் வெளிவந்தபோதே அவர் அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் அந்த பாலர் பள்ளியின் முன்னாள் நிர்வாக ஊழியர்களாக இருந்த நான்கு பெண்களும், இந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். 48, 58, 61 மற்றும் 66 வயதுடைய பெண்கள் அனைவருக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த தகவல்களை வேண்டுமென்றே மறைத்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த நான்கு பெண்களும் பின்னர் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சிங்கையில் வெளிநாட்டு ஊழியரை அடித்த உயர் அதிகாரி – கொதித்தெழுந்த இணையவாசிகள்..!
இந்த வழக்கில் 66 வயதான ஒரே ஒரு பெண்மணி மட்டும் கண்டிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். முதல் குற்றவாளி உள்பட மற்ற நால்வரும் இந்த வழக்கில் தொடர் விசாரணையில் இருந்து வருகின்றனர்.சிங்கப்பூரில் 2 வயது பிஞ்சு குழந்தைக்கு ஒரு முதியவர் பாலியல் வன்கொடுமை கொடுத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.