TamilSaaga

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய சங்கம் – அமைச்சர் கிரேஸ் ஃபூ

சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி சங்கம் (PRAS) பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி பற்றிய அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதற்காக பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதில் சிங்கப்பூரின் திறனை மேம்படுத்தும் என்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் நேற்று ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

சிங்கப்பூரில் இந்தச் சங்கமானது கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. PRASன் அமைப்பின் துவக்க விழாவில் பேசிய திருமதி கிரேஸ் ஃபூ, அது பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளின் மூன்று பகுதிகளை கோடிட்டுக் காட்டினார்.

முதலில், பிளாஸ்டிக் கழிவுகளுக்கான சிங்கப்பூரின் திறன்களை PRAS உருவாக்கி விரிவாக்கும் என்றும். இதைச் செய்வதற்கான ஒரு வழியாக, பானக்கழிவுகளை பேக்கிங் செய்யும் முறையை தற்போது சிங்கப்பூர் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

PET பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் சிங்கப்பூரின் உள்ளூர் திறனை வலுப்படுத்த PRAS வழிவகுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் இத்தகைய வசதி உள்நாட்டில் பொருளாதார மதிப்பையும் பசுமை வேலைகளையும் உருவாக்கும். அத்துடன் துல்லியமான பொறியியல், மறுசுழற்சி உபகரணங்கள் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறைகள் போன்ற துறைகளில் நிபுணத்துவத்தை கொண்டுவரும், என்றார்.

Related posts