TamilSaaga

சிங்கப்பூர் பிரதமருக்கு வழங்கப்படும் மலேசியாவின் “மிக உயரிய விருது” – 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிங்கைக்கு கிடைத்த பெருமை

இன்று வெள்ளிக்கிழமை (மே 6) ஜோகூரில் நடைபெறும் ஒரு விழாவில், நமது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஜோகூரின் உயரிய அரச விருதை சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரிடமிருந்து பெறவுள்ளார். அதே நேரத்தில் நமது பிரதமரின் மனைவி மேடம் ஹோ சிங் அவர்களும், மாநில விருதைப் பெறவுள்ளார்.

ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா பெசாரில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் லீ மற்றும் மேடம் ஹோ ஆகியோர் ஜோகூர் மாநிலத்திற்கு வருவார்கள் என்று பிரதமர் அலுவலகம் (PMO) நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

PM லீக்கு SPMJ என்று அழைக்கப்படும் டத்தோஸ்ரீ Sri Paduka Mahkota Johor என்ற பட்டம் வழங்கப்படும், அதாவது கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி க்ரவுன் ஆஃப் ஜோகூர், என்பது அதன் பொருள்.

மலேஷியாவின் வழங்கப்படும் மிகஉயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது, இது 1886 ஆம் ஆண்டில் செயின்ட் மைக்கேல் மற்றும் செயின்ட் ஜார்ஜ் என்ற ஆங்கில ஆணையின் அடிப்படையில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்.. சமைத்து உண்ணும் புலம்பெயர் தொழிலாளர்கள் தலையில் விழுந்து “பெரிய இடி” – சமையல் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு!

சிங்கப்பூரை பொறுத்தவரை முன்னதாக அப்போதைய பிரதமர் லீ குவான் யூ மற்றும் சட்ட அமைச்சர் ஈ. டபிள்யூ. பார்கர் ஆகியோருக்கு 1984ல் இந்த விருது வழங்கப்பட்டது, பின்னர் பிரதமர் கோ சோக் டோங் அவர்களுக்கு 1991ல் இந்த விருது வழங்கப்பட்டது.

பிரதமர் லீ மற்றும் மேடம் ஹோ ஆகியோருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம் மற்றும் PMO மற்றும் வெளியுறவு, உள்துறை மற்றும் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வின்போது உடன் இருப்பார்கள் என்று PMO தெரிவித்துள்ளது.

குறைந்தது “4 லட்சம் செலவு செய்து சிங்கப்பூர் வரும் ஊழியர்களே” – நீங்கள் கவனிக்கவேண்டிய 6 விஷயங்கள்

இந்து வெள்ளிக்கிழமை இந்த அரசு மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகு, பிரதமர் லீ மற்றும் மேடம் ஹோ ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ உணவு விருந்தினை அளிப்பார்.

ஜோகூர் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரச நீதிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜோகூர் மாநில அரசாங்கப் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts