சிங்கப்பூரில் “Pet Hotel Platinum Dogs” கிளப்பின் உரிமையாளரிடம், ஒப்படைக்கப்பட்ட விலங்குகளை முறையாக பராமரிக்க தவறியதற்காக அவருக்கு தற்போது சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 33 வயதான சார்லோட் லீவ், இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு வாரங்கள் சிறை மற்றும் 35,700 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
நாய்களைப் பராமரிப்பதில் தனது கடமை தவறியதாக நான்கு குற்றச்சாட்டுகளையும், பொய்யான தகவல்களை வழங்கியதையும், நீதியின் போக்கைத் தடுத்ததையும், வேறு முகவரி மற்றும் அவரது சகோதரியின் பெயரில் வணிகத்தை பதிவு செய்ததையும் குறித்து அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாய்களைப் பராமரிப்பதில் அவர் கடமை தவறியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய மற்றொரு ஐந்து குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையின்போது தண்டனைக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒரு வருடத்திற்கு செல்லப்பிராணி தொடர்பான வணிகங்களை நடத்துவதற்கு Liewக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல நாய்கள் லீவின் பராமரிப்பில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் இரண்டு நாய்கள் இறந்துவிட்டன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாய்களுக்கான போர்டிங் சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம் புக்கிட் பஞ்சாங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் கடந்த ஜனவரி 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. ஆனால் அந்நிறுவனம் அந்த ஆண்டு அக்டோபரில் லீவின் சகோதரியின் பெயரில், உட்லேண்ட்ஸில் ஒரு முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று, பிரின்ஸ் என்று பெயரிடப்பட்ட Shetland sheepdog ஒன்று அந்த நிறுவனத்திற்கு அழைத்துவரப்பட்டது. ஆனால் அந்த நாய் டிசம்பர் 22 மற்றும் 24க்கு இடையில் இறந்துள்ளது.