சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் கடந்த ஒன்றாம் தேதி நடந்து முடிந்த நிலையில் திரு தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் கிட்டத்தட்ட 71% வாக்கு வித்தியாசத்தில் தனக்கு எதிர்த்துப் போட்டியிட்ட இருவரையும் வெற்றி பெற்று சிங்கப்பூர் வரலாற்றில் பிரம்மாண்ட சாதனை படைத்தார். அவர் அன்னாசி பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார். எனவே, சிங்கப்பூரில் தற்பொழுது அன்னாசி பழம் ஆனது புகழ் பெற்றுள்ளது. எங்கு சென்றாலும் துரியன் பழம் வாசம் வீசும் சிங்கப்பூரில் தற்பொழுது அன்னாசிப்பழம் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
இது குறித்து ஒரு கடைக்காரர் கூறும் பொழுது வழக்கமாக பைனாப்பிள் கேக்குகள் ஒரு நாளைக்கு மூன்று வரை விற்பனை ஆகும். ஆனால் தற்பொழுது ஒரு நாளைக்கு 30 அன்னாசி பழ கேக்குகள் வரை விற்பனையாவதாக கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல், திரு தர்மன் அவர்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு கேக்கு வாங்கினால் மற்றொரு கேக் இலவசம் என்ற ஆஃபரையும் அந்த கடைக்காரர் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரின் அப்பர் தாம்சன் சாலையில் உள்ள ‘கேசுவரினா கறி’ என்ற உணவகம் வருகின்ற ஒன்பதாம் தேதி வரை அன்னாசி பழம் பிளேவரில் ஹோட்டலில் உள்ள பரோட்டா,சீஸ் பரோட்டா ஆகியவற்றிற்கு பாதி விலையில் விற்பனை அறிவித்துள்ளது. இவை தவிர பழக்கடைகளிலும் சென்ற மாதங்களை ஒப்பிடும் பொழுது தேர்தலுக்குப் பிறகு அன்னாசிப்பழ விற்பனை 10 முதல் 15 சதவீதம் வரை கூடியுள்ளதாக தெரியவந்துள்ளது.