சிங்கப்பூரில் உள்ள ஹோலாந்து கிராமத்தில் உள்ள Standard Charted வங்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 7ஆம் தேதி கொள்ளையடித்த நபருக்கு நேற்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து சிங்கப்பூருக்கு சமூக வருகைக்கான அனுமதி பெற்று நுழைந்த அந்த நபர் வங்கியில் தன்னிடம் துப்பாக்கி உள்ளதாக ஒரு பேப்பரில் எழுதிக்கொடுத்து மிரட்டி சுமார் 30,400 க்கும் மேற்பட்ட வெள்ளிகளை கொள்ளை அடித்துள்ளார்.
பின்பு சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். அங்கு அவர் பிடிக்கப்பட்டு பின்பு தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். தற்போது தண்டனை காலம் முடிந்ததால் பிரிட்டனில் இருந்து கனடா செல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
ஆனால் காவல்துறையின் கோரிக்கை ஏற்று சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த நபர் சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது இந்த கொள்ளையில் ஈடுபட்ட ரோச்சு எனும் அந்த நபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் 6 பிரம்படியும் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து அழைத்து வரும்போது பிரம்படி வழங்கப்படாது என உறுதியளித்த காரணத்தால் அந்த தண்டனை நிறைவேற்றப்படாது.
சிறை தண்டனை மட்டும் அவர் ஒப்படைக்கப்பட்ட கடந்த ஆண்டு முதல் கணக்கில் கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் அனுபவிக்க வைக்கப்படும்.