சிங்கப்பூரில் இருந்து இந்திய விமானநிலையங்களுக்கு வந்தடையும் பயணிகளிடம் சிங்கப்பூர் வெள்ளியில் மட்டும் அபராதம் செலுத்த சொல்வது சரியா ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்து மீண்டும் தாயகம் திரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பத்திற்கு தேவையான தங்க நகைகளை வாங்கிக் கொண்டு வருவதை வழங்கமாகக்கொண்டுள்ளார். அப்படி குடும்ப உறுப்பினர்களுக்கு தங்கம் வாங்கி வரும் சில பயணிகளிடம் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் பயணிகள் எவ்வளவு தங்கம் கொண்டுவரலாம் என்பதற்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள், சிங்கப்பூரில் எத்தனை மாதங்கள் தங்குகின்றனர் என்பதை கணக்கில் கொண்டு அவர்கள் கொண்டுவரும் தங்கத்தின் அளவை கணக்கிடுவதாக கூறப்படுகிறது. மேலும் தங்கம் கொண்டுவரும் பலரிடம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க இந்தியா வந்தடையும் விமான பயணிகளிடம் அங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் டாலரில் மட்டுமே அபராதம் கட்ட சொல்லுகிறார்கள். இந்திய ரூபாய்களை அவர்கள் ஏற்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இது உண்மைதானா ? என்பது பயணிகளின் கேள்வியாக உள்ளது.
ஒரு சில வெளிநாட்டு ஏஜெண்டுகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது வழக்கமாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஏஜெண்டுகளுடன் சேர்த்து வெளிநாட்டு ஊழியர்களையும் சிரமப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்பது சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது .
மேலும் தங்கம் கொண்டு வருவது குறித்த முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.