TamilSaaga

சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டே பார்ட் டைம் பார்க்கலாமா? சம்பளம் மட்டும் $50 வெள்ளி வரை ஒருநாளைக்கே கிடைக்குமா? ஆனா?!

சிங்கப்பூரில் வேலை செய்து வீட்டின் கஷ்டத்தினை சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் கால் வைக்கின்றனர். இவர்கள் பல்வேறு வகையான பாஸில் தான் தினமும் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு லட்சத்திலும், சிலருக்கும் ஆயிரத்திலும் கொடுக்கிறார்கள்.

சும்மாவே ஒரு வேளை பார்த்து கொண்டு இருக்கும் போதே இன்னொரு வேளை வந்தால் தயங்காமல் செய்து வருவது பலரின் வாடிக்கையாக இருக்கிறது. இதையே சிங்கப்பூரில் ஒரு வொர்க் பாஸில் வேலைக்கு வந்து செய்தால் என்ன நடக்கும்? எப்படி இருக்கும் இந்த வாழ்க்கை? இதை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஆசையா இருக்கீங்களா… IPA வந்தவுடன் ஒரிஜினலா செக் பண்ணிடுங்க… ஏஜென்ட் செய்யும் பித்தலாட்டம் எக்கசக்கம் தான்!

சிங்கப்பூர் வேலைக்காக லட்சத்தில் கடனை வாங்கி வொர்க் பாஸில் வேலைக்கு வந்திருக்கும் பலருக்கு ஒருநாளையின் அடிப்படை சம்பளமே 20 முதல் 22 வெள்ளிக்குள் தான் இருக்கும். இதுவும் ஓடி பார்ப்பதை வைத்தே இருக்கும். இதில் இன்னும் சிலருக்கு 16 அல்லது 18 வெள்ளிக்குள் கூட சம்பளம் இருக்கும். அப்போது மீதம் இருக்கும் நேரத்தில் பார்ட் டைம் வேலைக்கு செல்ல சிலர் நினைப்பார்கள்.

எதாவது ஹோட்டல்கள், கடைகளில் வேலைக்கு செல்லும் போது 4 அல்லது 5 மணி நேர வேலைக்கே 30 முதல் 55 வெள்ளி வரை கூட சம்பளம் கிடைக்கும். இதை யோசித்த பலர் தொடர்ந்து இந்த பார்ட் டைம் வேலைகளை செய்தே வருபர். உங்க குடும்ப கஷ்டத்துக்கு வேண்டும் என்றால் இது உதவியாக இருக்கும். ஆனால் இப்படி வந்த வேலை நிறுவனத்தினை தவிர வேறு இடத்தில் வேலை செய்வது சிங்கப்பூரை பொறுத்த வரை சட்டப்படி குற்றமாகும்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு செல்ல செலவே இல்லாமல் Free Visa… இந்த வழில போனா ஏமாற மாட்டீங்க… வாழ்க்கையும் கியாரண்டி தான்! Tips & Tricks

உங்க IPA கொடுக்கும் போதே வேலைக்கு வரும் நிறுவனத்தினை விட வேறு நிறுவனத்தில் வேலை பார்க்க கூடாது என குறிப்பிட்டு இருக்கும். இதை மீறி நீங்க செய்யும் போது அங்கு வரும் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கினால் உங்களுக்கு சவுக்கடி கொடுத்து உடனே நாட்டினை விட்டு வெளியேற்றி விடுவார்கள். இதனால் மீண்டும் உங்களால் சிங்கப்பூர் வரக்கூட முடியாத நிலை ஏற்படும்.

சம்பளம் அதிகம் வேண்டும் என நினைக்கும் போது கோர்ஸ் நிறைய சிங்கப்பூரில் இருக்கிறது. உங்க துறைக்கேற்ற கோர்ஸினை செய்து சம்பள உயர்வுடன் ப்ரோமோஷனுடன் இருப்பதே சிறந்ததாக கருதப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts