சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறாமல் இருந்த பங்குனி உத்திரம் திருவிழா, நாளை (மார்ச்.18) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
சிங்கப்பூரின் Holy Tree Sri Balasubramaniar கோவிலில் இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, Holy Tree Sri Balasubramaniar கோவில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், முழு தடுப்பூசி செலுத்தப்பட்ட பக்தர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் ஆலய நுழைவு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்குடம் காணிக்கை மட்டும் – காலை 12 முதல் மதியம் 12 வரை
பங்குனி உத்திரம் அன்று பால் குடம் விற்பனை இல்லை
பொது மக்களுக்கு நுழைவு
6am – 12pm
4pm – 9pm
அபிஷேகத்திற்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்ய பாக்கெட் மில்க் வாங்கலாம்.
கிருமி நீக்கம் செய்ய மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் மூடப்படும்.
இந்த வருடம் காவடி ஊர்வலம் கிடையாது.
என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பங்குனி உத்திரத்திற்கு தயாராகும் வகையில் தற்போது Holy Tree Sri Balasubramaniar கோவிலில் குழந்தைகளுக்கும் மொட்டையடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பிரசாதத்துக்கான ஏற்பாடுகளும் கோவிலில் நடைபெற்று வருகிறது.

நாளை பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். அந்த அளவுக்கு நேரம் இல்லை என்பவர்கள், “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதனால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
முடிந்தால், ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்கலாம். அதுமட்டுமின்றி, வயிறு நிரம்பும் அளவுக்கு அன்னம் படைக்க வேண்டும். குறிப்பாக, பகல் வேளையில் ஏழை – எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.