TamilSaaga

சிங்கப்பூரில் 99,000 முதலாளிகளுக்கு “840 மில்லியன் டாலர்கள்” உதவித் தொகை – இனியாவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்தந்த Pass-க்கு ஏற்ற உண்மையான சம்பளம் கிடைக்குமா?

இந்த மார்ச் மாத இறுதிக்குள், 99,000 க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் முதலாளிகள் $840 மில்லியன் டாலர்களை ஊதியக் கடன் திட்டத்தில் (WCS) பெற உள்ளார்கள்.

Ministry of Finance and the Inland Revenue Authority of Singapore (Iras) இன்று (மார்ச்.22) வெளியிட்ட அறிவிப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில், 98,000 க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு WCS மூலம், சுமார் $940 மில்லியன் வழங்கப்பட்டது.

முழுநேர, பகுதிநேர மற்றும் மணிநேர மதிப்பிடப்பட்ட பணியாளர்கள் உட்பட CPF பங்களிப்புகளைப் பெறும் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் ஊழியர்கள் இந்த WCS திட்டம் மூலம் பயன் பெறுகிறார்கள்.

தகுதியான முதலாளிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குள் அவர்களின் பேஅவுட் தொகை குறித்து அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி, பேஅவுட்கள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளில் PayNow கார்ப்பரேட் அல்லது Giro மூலம் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க – ஏஜெண்டுகளை நம்பாதீங்க… சிங்கப்பூரின் பிரபல MullenLowe நிறுவனத்தில் வேலை – உங்கள் வீட்டில் இருந்தே நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஊதிய உயர்வுகளுக்கு இணை நிதியளிக்கும் WCS, மூன்று ஆண்டு திட்டமாக 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் 2020 வரை நீட்டிக்கப்பட்டது, இது வணிகங்களின் உற்பத்தித்திறன் ஆதாயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதி தான் இது.

940 மில்லியன் டாலர்கள் என்றால், கனக்குப் போட்டுக் கொள்ளுங்கள். கோடிகள் கொட்டும் திட்டம் இது. பெருந்தொற்று காரணமாக சிக்கித்தவிக்கும் நிறுவனங்களை மீட்கும் முயற்சி இது. அதேசமயம், இது ஊழியர்களுக்கும் பயன்தர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

குறிப்பாக, சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், இன்னமும் குறைவான சம்பளத்தில் தான் உழைக்கின்றனர். S Pass எடுத்து வருபவர்களில் யாருக்கு தான் சிங்கப்பூர் அரசு நிர்ணயித்துள்ள S Pass-க்கான உண்மையான Basic Pay கிடைக்கிறது? யாருக்கும் முழுமையான சம்பளம் கிடைப்பதில்லை.

நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று சிங்கப்பூர் அரசு இப்படி கோடிகளை கொட்டிக் குவிக்கும் போது, முதலாளிகளும் கொஞ்சம் மனது வைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்கள் Pass-க்கு ஏற்ற, அரசு நிர்ணயித்திருக்கும் ஊதியத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts