TamilSaaga

‘தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ – நாடாளுமன்றத்தில் அமைச்சர் லாரன்ஸ் விளக்கம்

சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில், சிங்கப்பூர் மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று ஜூலை 26 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் இதேபோன்ற அளவை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில் குறிப்பாக தடுப்பூசி போட்ட நபர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை எளிதாக்கும் வண்ணம் பல செயல்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் குறிப்பாக தடுப்பூசி போட்ட நபர்கள் பயணிக்க அரசாங்கம் எல்லைகளை மீண்டும் திறக்கும் என்று வோங் கூறினார். பெருந்தொற்றை நன்கு நிர்வகித்த நாடுகள் அல்லது பிராந்தியங்களுடன் பயண தாழ்வாரங்களை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த ஏற்பாடுகள் மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் சிங்கப்பூர் திரும்பி வரும்போது ஹோட்டலில் 14 நாள் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாகமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கடந்த சில நாட்களாக பெருந்தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.

Related posts