சிங்கப்பூர் தற்போது 11 நாடுகளில் இருந்து மக்கள் சிங்கப்பூருக்குள் வர அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த 11 நாடுகளின் பட்டியலில் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மற்றும் சிங்கப்பூரில் பணி செய்ய விரும்பும் தொழிலாளர்கள் சிங்கப்பூருக்குள் வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலை ஒருபுறம் இருக்க சிங்கப்பூரில் இருந்து அவசர தேவைகளுக்கு மீண்டும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் இந்தியர்கள். இந்த இக்கட்டான சூழலில் விமான சேவை நிறுவனத்தின் சில நிபந்தனைகள் பயணிகளை கதிகலங்க வைத்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இந்த அக்டோபர் செல்ல டிக்கெட் புக்கிங் செய்திருந்த நிலையில், சிங்கப்பூரில் Dormitoryகளில் நிலவும் தனிமைப்படுத்துதல் உத்தரவு காரணமாக டிக்கெட் புக் செய்த தொழிலாளர்கள் தற்போது குறித்த தேதியில் பயணிக்க முடியாமல் தவித்து வருவதாக நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அக்டோபர் முன்பதிவு செய்த தேதியில் பயணிக்க முடியவில்லை
சிங்கப்பூரில் தற்போது உள்ள தனிமைப்படுத்துதல் உத்தரவு காரணமாக சிங்கப்பூரில் இருந்து சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் முன்பதிவு செய்த தேதியில் பயணிக்க முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
Refund கிடையாது
இந்த முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கு விமான சேவை நிறுவனம் Refund அளிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த மாதத்தில் அக்டோபர் தாயகம் செல்ல முன்பதிவு செய்தவர்கள் பயண தேதியை மாற்ற முடியாமலும் தவித்து வருகின்றனர். ஒரு மும்முனை தாக்குதல் போல, புக் செய்த தேதியில் பணயம் செய்யமுடியாமல், புக் செய்த பணத்தையும் திரும்ப பெறமுடியாமல், பயண தேதியையும் மாற்றமுடியாமல் மக்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர் என்றால் அது மிகையல்ல என்றே கூறலாம். ஆகையால் பயணிகளின் துயர் தீர்க்க விமான நிலைய அதிகாரிகள் மற்றும் இருநாட்டு அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு பயணிகளுக்கு உதவ வேண்டும் என்று பலதரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையிலும் இந்த அக்டோபர் மாதம் பயண தேதியை மாற்ற விமானங்கள் இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.