TamilSaaga

சிங்கப்பூர்.. 4 மணிநேரமாக உயிருக்கு போராடி இறந்த “புலம்பெயர் தொழிலாளி”.. விபத்து எப்படி நடந்தது? – இறுதிக்கட்ட ஆய்வை வெளியிட்ட Coroner

சிங்கப்பூரில் நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள சான் பிரதர்ஸ் கட்டிடத்தில் Liftன் மேற்புறத்தில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹொசைன் முகமது சாஹித் என்ற புலம்பெயர் தொழிலாளி, லிப்ட்டின் மீது ஏறிய நிலையில் அதில் மாட்டி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அந்த வெளிநாட்டுத் தொழிலாளியை அவர் லிப்ட்டில் சிக்கியிருந்த நிலையில் இருந்து வெளியேற்ற போராடிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) முயற்சிகளுக்கு பல விஷயங்கள் இடையூறாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் சிரமமான நிலையில் சிக்கியிருந்ததால் அவரது இடது கையில் ஏற்பட்ட 30cm x 10cm அளவுள்ள காயம் உள்ளிட்ட அவரது பிற காயங்களுக்கு அதிகாரிகளால் பயனுள்ள மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று அப்போது கூறப்பட்டது.

29 வயதுடைய ஹொசைன் என்ற அந்த வெளிநாட்டு தொழிலாளி, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சிக்கியிருந்த நிலையில் இரத்த கசிவு காரணமாக இறந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று (மே 10), அந்த பங்களாதேஷ் தொழிலாளியின் மரணம் குறித்த தனது அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்புகளை Coroner கிறிஸ்டோபர் கோ வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த புலம்பெயர் தொழிலாளியின் மரணத்தில் எந்தவித சதியும் இல்லை என்றும். இது துரதிஷ்டவசமாக நடந்த ஒரு சம்பவம் என்றும் அவர் கூறினார். ஹொசைன் கடந்த ஆண்டு பிப்ரவரி 27 அன்று இறந்தபோது லிப்ட் ஒப்பந்ததாரர் டிகோர் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு அவர் சான் பிரதர்ஸ் கட்டிடத்தில் உள்ள லிப்ட் சுவர் பேனலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சிங்கப்பூரில் சிறுநீர் மூலம் உருவாக்கப்படும் சிமெண்ட்.. Nanyang பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாதனை – இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

Coroner என்பவர் மரணம் குறித்த அறிக்கைகளை வெளியிடும் அதிகாரி ஆவர், தொழிலாளர்களின் மரணம் இயற்கையாக நடந்ததா அல்லது வேறு யாரேனும் அதில் ஈடுபட்டுள்ளார்களாக என்பதை அவர் பல கோணங்களில் விசாரித்து அறிக்கையை சமர்பிப்பார்.

சிங்கப்பூர் Bedok குடியிருப்புப் பகுதியில் நடந்த கோர தீ விபத்து.. 3 வயது குழந்தை உள்பட மூன்று பேர் மரணம் – 60 பேர் குடியிருப்பிலிருந்து வெளியேற்றம்

பணியிட மரணங்கள் இந்த 2022ம் ஆண்டில் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே தொழிலாளர்களும் அவர்களது முதலாளிக்கும் மிகுந்த கவனத்தோடு செய்லபட வேண்டும் என்றும் பிரதமர் லீ அறிவுறுத்தியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts