TamilSaaga

சிங்கப்பூரில் தாதிமை இல்ல வருகையாளர்களுக்கு இனி கோவிட் பரிசோதனை

சிங்கப்பூரில் தாதிமை இல்லங்களில் உள்ள முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இல்லங்களுக்கு வரும் வருகையாளர்களுக்கு Antigen Rapid Test சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வருகையாளருக்கு பரிசோதனை செய்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பரிசோதனை செய்ய இல்லத்தில் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

வருகையாளர்களுக்கு ART பரிசோதனை செய்வது மிகவும் சுலபமானது. முதியோர்கள் தங்களுக்கு தானே கூட இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

வயதில் மிகவும் மூத்தவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கண் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு ஊழியர்கள் மூலம் பரிசோதனை செய்வதாக தாதியர் வாசுகி தெரிவித்தார்.

இந்த விதிமுறைகள் வருகை தரும் வருகையாளர் மற்றும் உறவினர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.

Related posts