TamilSaaga

தொடங்கியது அடுத்தக்கட்ட VTL சேவை : “இன்று முதல் கூடுதலான மக்களை வரவேற்கும் சிங்கப்பூர்”

சிங்கப்பூர் அரசு தனது தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை திட்டத்தை மேலும் எட்டு நாடுகளுக்கு விரிவுபடுத்த அண்மையில் ஆவணம் செய்தது. இது பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இன்று அக்டோபர் 19 முதல், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், UK மற்றும் அமெரிக்காவிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இந்த ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்று சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) கடந்த அக்டோபர் 9 சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த விரிவாக்கம் “மிகுந்த எச்சரிக்கையுடன் மற்றும் படிப்படியாக” நடத்தப்படுகிறது, இது உலகளாவிய இணைப்பைக் கொண்ட ஒரு சர்வதேச விமான மையமாக சிங்கப்பூரின் நிலையை “மீட்டெடுக்க மற்றும் மீண்டும் உருவாக்க” உதவும் என்று CAAS தெரிவித்துள்ளது.

இந்த பயணிகள் சிங்கப்பூருக்கு புறப்படவிருக்கும் 48 மணி நேரத்திற்குள் PCR சோதனையை எடுக்க வேண்டும். மேலும் சாங்கி விமான நிலையத்திற்கு வந்தவுடன் மற்றொரு சோதனை எடுத்து, எதிர்மறை சோதனை முடிவு வரும் வரை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகையால் அவர்கள் நாட்டிற்கு வந்த பிறகு மூன்றாவது மற்றும் ஏழாவது நாளில் PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை.

“இதுகுறித்த சிங்கப்பூர் MOHன் (சுகாதார அமைச்சகம்) பொது சுகாதார மதிப்பீடு என்னவென்றால், புறப்படுவதற்கு முன் சோதனை மற்றும் வருகைக்கான சோதனை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட வழக்குகளை கண்டறிந்து தனிமைப்படுத்த போதுமான பாதுகாப்புகளை வழங்குகிறது” என்று CAAS கூறியது. மூன்றாவது மற்றும் ஏழாவது நாட்களில் PCR சோதனைகளை நீக்குவது தடுப்பூசி போடப்பட்ட பயண பாதைகளின் கீழ் பயணம் செய்வது மலிவானதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று அது மேலும் கூறியுள்ளது.

அதேபோல புருனே அல்லது ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு, இந்த மாற்றங்கள் இன்று அக்டோபர் 19 அல்லது அதற்குப் பிறகு சிங்கப்பூர் வருபவர்களுக்கு பொருந்தும். மேலும் அவர்கள் அவ்விருநாடுகளில் இருந்து வந்த பிறகு மூன்றாவது மற்றும் ஏழாவது நாட்களில் செய்யப்பட வேண்டிய PCR சோதனைகளுக்கு ஏற்கனவே பணம் செலுத்தி, ஆனால் அக்டோபர் 19 அல்லது அதற்குப் பிறகு மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைந்தால் அந்த சோதனை கட்டணங்கள் திருப்பித் தரப்படும்.

Related posts