TamilSaaga

சிங்கப்பூர் கோவிலில் கைவரிசை…உண்டியலை உடைத்து ஆயிரக்கணக்கான டாலர்களை திருடிய மர்ம நபர்கள்!

சிங்கப்பூரின் சாங்கி ரோட்டில் தாவோ சமயத்தைச் சார்ந்தவர்களுக்கான கோவில் ஒன்று உள்ளது. தற்பொழுது அந்த கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான வெள்ளிகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 1.50 மணி அளவில் மர்ம நபர்கள் இருவர் பூட்டுகளை திறக்க முயற்சி செய்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் உடனடியாக கோயிலின் பூட்டுகளை மாற்றுவதாக அறிவித்துள்ளது.

சம்பவம் நடந்ததை கண்டறிந்த உடன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கைரேகை முதலிய அனைத்தையும் தடயங்களாக பதிவு செய்து, சிசிடிவி தடயங்களையும் அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை உடனடியாக தேடும் பணியை முடுக்கியுள்ளனர்.

இரவு இரண்டு மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்காது என்பதை நன்கு அறிந்த திருடர்கள் கைவிளக்கை மட்டும் வைத்துக் கொண்டு உண்டியலில் பணம் இருக்கிறதா என்பதை முதலில் சோதித்துப் பார்த்துள்ளனர். ஒரு நீண்ட குச்சியை வைத்து உண்டியலுக்குள் கைவிட்டு சோதித்து பார்த்து பின்னர் திருட முயற்சித்துள்ளனர். கோவிலில் வசிக்கும் நபர் ஒருவர், சந்தேகம் ஏற்படவே முழித்துக் கொண்ட நிலையில் திருடர்களை பார்த்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.

போலீசார் உடனடியாக வந்து வேறு திருடர்கள் யாரேனும் ஒளிந்துள்ளனரா என சோதித்துப் பார்த்துள்ளனர். பின்பு தடயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கோவிலிலேயே திருடு போன சம்பவம் தற்பொழுது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு பணம் திருட்டு போனது என்று இன்னும் சரியாக தகவல்கள் கிடைக்கவில்லை.

Related posts