சிங்கப்பூரில் உள்ள Upper Thomson குடியிருப்பு பகுதியில் நுழைந்த குரங்குகள் சரமாரியாக அட்டாக் செய்துவிட்டு போயிருக்கின்றன. இதுகுறித்த தகவலை STOMP தளத்துடன் பகிர்ந்துள்ளார்.
கடந்த வாரம் (மார்ச் 24) மதியம் அந்த குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில், கிட்சன் பகுதியின் சாமான்களை உருட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. அப்போது ஹாலில் உட்கார்ந்திருந்த அந்த வீட்டின் உரிமையாளர் பெண், “தன் தம்பி தான் சமையலறையில் இருப்பதாக நினைத்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், நேரம் செல்ல செல்ல சப்தம் விசித்திரமாக கேட்கத் தொடங்கியது. முட்டையை உடைக்கும் சத்தமெல்லாம் கேட்டது. “அப்போது நான் அருகில் சென்றபோதுதான், கிச்சனில் உருட்டியது தம்பி அல்ல; குரங்குகள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று அப்பெண் STOMP-யிடம் தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படங்களை அவர் ஸ்டாம்புடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் “குரங்கு… குரங்கு” என்று கத்திக் கொண்டு ஓட, குரங்குகள் தலைத்தெறிக்க கிச்சனில் இருந்து வெளியேறி இருக்கின்றன. ஆனால், சாப்பாட்டுக்கு வைத்திருந்த அனைத்து அயிட்டங்களையும் காலி செய்துவிட்டு தான் அவை ஓடியிருக்கின்றன.