TamilSaaga
moh

தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பொதுமக்கள்… இழப்பீட்டு தொகை மட்டும் 14 கோடியா? என்ன சொல்கிறது MOH

MOH: Vaccine Injury Financial Assistance Programme (Vifap) கீழ் மொத்தம் 413 பேர் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடுப்பூசியால் பாதிக்கப்பட்டதாக பணம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Covid பரவலுக்காக உருவாக்கப்பட்டது தடுப்பூசி. இதனை போட்டு ஏகப்பட்ட மக்களுக்கு நிரந்தர பிரச்னை ஏற்பட்டது. மேலும் சிலர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த மக்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இழப்பீடு வழங்கியது. இந்த எண்ணிக்கை 2021ன் இறுதியில் 296ஆக இருந்தது.

இதற்காக மொத்தம் வழங்கப்பட்ட இழப்பீடு தொகை $1,895,000 சிங்கப்பூர் டாலர் செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசியின் செலுத்திக்கொண்டதை தொடர்ந்து இறந்தவர்களுக்கு அல்லது நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு $225,000 கொடுக்கப்பட்டுள்ளது.

2021 இல் Pfizer-BioNTech தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டு ஆறு நாட்களுக்குப் பிறகு, ஆறு நாட்களுக்கு பின்னர் பளுதூக்குதல் செய்த பின்னர் மாரடைப்பு ஏற்பட்டது. 16 வயது இளைஞரான அவர் அதிகபட்ச இழப்பீட்டுக்கு தகுதி பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் ஒரேயொரு தடுப்பூசி மட்டும் போட்டவரா நீங்க? உங்களால் இந்தியா போக முடியுமா? – ஏர்போர்ட்டில் என்னென்ன ஆவணங்கள் கொடுக்கணும்? – Complete Report

இந்த இழப்பீட்டு தொகைக்கு தகுதியுடையவர்கள் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லது நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் தீவிர பக்கவிளைவுகளை அனுபவித்திருக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். மருத்துவர் அவர்களின் உடல்கோளாறு பிரச்னை தடுப்பூசியுடன் தொடர்புடையதாக இருப்பதை மதிப்பிட வேண்டும்.

அனைத்து Vifap விண்ணப்பங்களும் மருத்துவ குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும். Vifapக்கு தகுதி பெற, பெறப்பட்ட கோவிட் -19 தடுப்பூசியுடன் தொடர்புடைய ஒரு தீவிர பக்க விளைவு ஏற்பட்டதாக மருத்துவ குழு மதிப்பிட்டிருக்க வேண்டும், என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Marine Shipyard சிங்கப்பூரில் துறையில் வேலைக்கு சேரணுமா? 1200 சிங்கப்பூர் டாலர் சம்பளமா? அதுக்கு முன்ன இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க

முன்னாள் செவிலியர் ஒருவர் மார்ச் 2021 இல் தனது இரண்டாவது தடுப்பூசியை எடுத்து கொண்டார். அதனால் 151 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு involuntary movement disorder இருப்பது கண்டறியப்பட்டது. இது அவரை சக்கர நாற்காலியில் இருந்து ஆக்ஸிஜன் டியூப்புடன் வாழும் நிலைக்கு மாற்றியது.

டிசம்பரில் தனது வேலையை இழந்த பிறகு, குழந்தை பராமரிப்புக்கு இழப்பு தொகை கேட்டு நீதிமன்ற படியேறினார். மேல்முறையீட்டில் அவருக்கு வெற்றி கிடைத்தது. SGH ஊடக நிறுவனத்திடம், அவர் நன்றாக இருக்கும் போது மருத்துவமனையில் சேர மீண்டும் விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts