சிங்கப்பூரில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மை சமூகத்தினரின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது முக்கியம் என்றும். பல இன சமுதாயத்தில் சிறுபான்மையினராக இருப்பது மிகவும் சிரமம் என்றும் நிதியமைச்சர் லாரன்ஸ் யோங் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூறினார்.
மேலும் இந்த விஷயம் வாழ்க்கையின் எல்லா கலகட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறினார். வேலை தேடுவது, வாடகைக்கு வீடு தேடுவது ஆகியவற்றில் சிறுபான்மை இனத்தவர்கள் என்று வரும்போது அவர்கள் பெரிய அளவில் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் இவையெல்லாம் நடப்பதில்லை என்று பலர் கூறினாலும், இன்றளவும் சிங்கப்பூரில் சிறுபான்மை சமூகத்தினருக்கு இவை நடந்து கொண்டுதான் வருகின்றது என்று அமைச்சர் லாரன்ஸ் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மட்டுமின்றி உலக அளவில் இந்த பாகுபாடு பல நாடுகளில் பார்க்கப்பட்டு தான் வருகின்றது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது வளர்ந்து வரும் இளைஞர் சமுதாயம் அவைகளை உடைத்தெறியும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.