TamilSaaga

மின் சைக்கிள்கள் – சிங்கப்பூரில் கடந்த ஓராண்டில் வெகுவாக அதிகரித்த விற்பனை

சிங்கப்பூரில் கடந்த ஓர் ஆண்டாக மின் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக உணவு மற்றும் இதரப் பொருட்களின் தேவை மற்றும் அதற்கனசேவை அதிகரிப்பே இந்த மின் சைக்கிள் பயன்பாட்டிற்க்கு காரணமாக கூறப்படுகிறது.

தற்போது வெளியான கணக்கெடுப்பு ஒன்றில் கடந்த மாதம் இறுதியில் மட்டும் புதிதாக 31,660 மின் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே கால அளவில் வெறும் 15,800 மின் சைக்கிள்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முறையாக பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த சைக்கிள்களை சாலைகளிலும் சைக்கிள் பாதைகளிலும் பயன்படுத்தலாம் என்ற விதி கடந்த 2018ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மைக்காலமாக இந்த மின் சைக்கிள்கள் பயன்பாடு சிங்கப்பூரில் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த சைக்கிள்களை சாலை ஓட்டிச்செல்ல தனியாக ஆன்லைன் தேர்வு எழுத வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts