சிங்கப்பூரில் கடந்த திங்களன்று நடைபெற்ற ‘சிங்கப்பூர் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்தின் மாதிரி தின விழா’வில் கலந்து கொண்டு பேசிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. ஆல்வின் டான் அவர்கள், சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப இணைப்பு அதன் முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பூர் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டத்தின் மாதிரி தினவிழாவில் பங்கேற்று பேசியதாவது,
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காகவும், இந்த பெருந்தொற்று காலத்திலும் சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்காகவும், இணையதள மற்றும் கலப்பின சுற்றுலாக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், உலக நாடுகளின் எல்லைகள் ஓரளவுக்கு திறக்க ஆரம்பித்தாலும் கூட இன்னும் தொடர்வது தேவை என கருதுகிறோம். காரணம் உண்மையான ஒரு உலக சுற்றுலாப் பயணத்தை அவை தான் நிறைவு செய்ய முடியும்.
பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்கிய இந்த பெருந்தொற்று தொழில்நுட்பங்களின் தீர்வும் தேவையும் எவ்வளவு அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அதன் ஒரு வெளிப்பாடுதான் நாம் நடத்திய ‘சிங்கப்பூர் மாரத்தான் 2020’ அதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் நேரடியாக களத்தில் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் ஒரு ‘மாதிரி’ உருவங்களை உருவாக்கி, இணையதளம் வழியாக உருவாக்கப்பட்ட ஓடுதளத்தில் பங்கேற்க வைத்தது உண்மையிலேயே ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது. அதில் இன்னும் சிறப்பாக கலந்துகொண்ட 13,000 வீரர்களில் 37% பேர் வெளிநாடுகளில் உள்ளவர்கள் என்பது, இந்த இணையதள கலப்பின சுற்றுலாக்களின் தேவை இன்னும் அதிகரித்து இருப்பதையே நமக்கு காட்டுகிறது.
மேலும் சுற்றுலா வணிகம் தங்களது தொழில்நுட்ப திறன்களை கட்டமைத்து இருப்பது ஒரு சிறப்பான வளர்ச்சியின் ஆரம்ப வெளிப்பாடாகவே இருக்கிறது. சுற்றுலா எல்லைகளை மீண்டும் திறக்க தயாராகும் சிங்கப்பூர் சுற்றுலாத் துறைக்கு உதவும் வகையில் இந்த,’சிங்கப்பூர் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்’ இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஏதாவது 2023 வரை நீட்டிக்கப்படுகிறது.
2019 சிங்கப்பூர் அரசினால் ஒப்புதல் தரப்பட்டு, சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தால்(STB)தொடர்ந்து செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இருக்கும் இந்தத் திட்டம், சுற்றுலா துறையில் புதிய தீர்வுகளை முன்னெடுப்பதற்கும், தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சுற்றுலா வணிகத்தை இணைப்பதற்காகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதன் ஒரு சிறப்பான உதாரணமாக சிங்கப்பூரின் காப்த்ரான் கிங்ஸ் நட்சத்திர தங்கும் விடுதி ( Copthorne King’s Hotel) அமெரிக்காவை தளமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான வூ ஹு (Woo Hoo)உடன் இணைந்து விடுதியின் செயல்பாடுகளை டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்ததைக் குறிப்பிடலாம்.வூ ஹூ உருவாக்கிக் கொடுத்த (குரல் கட்டளை) குரல் உதவியாளர் அமைப்பினை பயன்படுத்தி விருந்தினர்கள் தங்கள் தேவைகளை பதிவுசெய்வது, செய்வது அறையில் தேவைப்படும் வசதிகளை – உதாரணமாக அறையில் உள்ள இசை பொழுதுபோக்கு அம்சங்களை விருப்பத்திற்கு ஏற்றார்போல் பயன்படுத்துவது, அறையிலேயே உணவருந்துவது, அதற்கான பட்டியலை பதிவுசெய்வது, அறையின் விளக்குகளை சரி செய்வது, போன்ற தேவைகளை தாங்களாகவே அந்த குரல் உதவியாளர் அமைப்பின் மூலம் செய்துகொள்வது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது அறையில் தங்கும் விருந்தினர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைவதோடு மட்டும் அல்லாமல், நேரடியாக விடுதியின் ஊழியர்களை ஒவ்வொரு தேவைக்கும் அழைப்பது, அவர்கள் உதவிக்காக காத்திருப்பது போன்றவற்றை வெகுவாகக் குறைத்துள்ளது.
இதுபோல ஒவ்வொரு சுற்றுலா வணிக நிறுவனங்களும் தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தும் பொழுது, அது பயணிகளை வெகுவாக கவருவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா வணிகத்தை இன்னும் மேம்படுத்தவும் உதவும். இதேபோல இந்த திட்டத்தின் மூலம் இன்னும் ஏழு வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் சிங்கப்பூர் சுற்றுலா வணிக அமைப்புகளோடு இணைக்கப்பட உள்ளதாகவும் திரு . டான் அவர்கள் குறிப்பிட்டார்.