TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… InspIRRE இல் உள்ள புதிய கடையில் அனைத்து பொருட்களும் இலவசம்! உடனே பெறலாம்!

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், இப்போது புதிதாக திறக்கப்பட்ட கடையில் பொதுமக்களால் வழங்கப்பட்ட பைகள், மின்விசிறிகள் மற்றும் மெத்தைகள் போன்ற இலவசப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் இதுபோன்ற முதல் கடை, இலாப நோக்கற்ற நிறுவனமான ItsRainingRaincoats-ன் முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. இந்த நிறுவனம், 470 Upper Paya Lebar சாலையில் புதிதாக திறக்கப்பட்ட InspIRRE இல் அமைந்துள்ளது.

இதனை மனிதவளத்துறையின் மூத்த அமைச்சர் ஜாக்கி முகமது சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த கடையானது, கீழ் மட்டத்தில் (lower level) அமைந்துள்ளது. மேல் மட்டத்தில் ItsRainingRaincoats தன்னார்வலர்களுக்கான அலுவலகம் உள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ‘Work Permit’-ல் பணிபுரியும் ஊழியர்கள்.. சிங்கை பெண்ணையோ அல்லது இங்கு வசிக்கும் PR-ஐ திருமணம் செய்வது எப்படி?

தன்னார்வத் தொண்டு செய்ய அல்லது குறிப்பிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்க விரும்புவோர் ItsRainingRaincoats ஐ நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

ஆகஸ்ட் 20 அன்று, கட்டுமான தளங்களில் பணியாற்றும் சுமார் 50 வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த அமைப்பின் மூலம் ஷூக்களை பெற்றனர். அவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் அதே ஷூக்களை பயன்படுத்தி விளையாடினார்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts