TamilSaaga

சிங்கப்பூருக்கு நம்பி அனுப்பும் பெற்றோர்.. பணத்தை வீணடிக்காமல் இருக்க “Best Choice” – S Pass, E Passஐ விட சிறந்தது Skilled Test

அன்றைய காலம் முதலே சிங்கப்பூரில் வேலை செய்வது என்பது பலரின் கனவாகவே இருந்து வருகின்றது. இந்தியர்களும் குறிப்பாக தமிழர்களும் சிங்கப்பூர் வந்து பணி செய்ய அதிக அளவில் விரும்புகின்றனர். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் சிங்கப்பூர் வந்து பணி செய்ய பல வழிகள் உள்ளன.

அதில் பல வழிகளில் ஒன்று தான் Skilled Test முடித்து சிங்கப்பூர் வருவது, இன்றளவும் சிங்கப்பூரில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஆரம்ப காலத்தில் skilled test முடித்து இங்கு வந்தவர்கள் தான். தமிழகத்தில் பல நிறுவனங்கள் இந்த Skilled Test வகுப்புகளை நடத்திவருகின்றனர், அங்கு உங்களுக்கு தேவையான துறைகளில் உள்ள Skilled Testகளை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

உதாரணமாக நீங்கள் கட்டுமான துறையில் வேலை பெற வேண்டுமென்றால் அந்த துறை சார்ந்த Skilled Test எடுத்துக்கொள்ளலாம். Electrical துறை என்றால் அதற்கென்று தனி Skilled Test உள்ளது. இதுபோல பல துறைகளுக்கென்று தனித்தனியே Skilled Testகள் உள்ளது.

Skilled Test வகைகள்

Steel Reinforcement Work
Electrical and Wiring
Plumbing and Pipe Fitting
Water Proof
AirCon

என்று பல skilled test வகைகள் உண்டு, இதை நல்ல நிறுவனங்களில் முறையே நீங்கள் முடித்து Skilled Test சான்றிதழ் பெற்றுக்கொண்டால் நிச்சயம் உங்களுக்கும் சிங்கப்பூர் வந்து வேலை செய்ய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

சிங்கப்பூர் அரசின் “வாவ்’ ஐடியா… Resorts-களாக மாறும் பழைய பேருந்துகள் – இதனால் தான் சிங்கப்பூர்னாலே ஒரு கெத்தும், மரியாதையும் கிடைக்குது!

சரி Skilled Test முடிப்பதால் என்ன பயன்?

Skilled Test நீங்கள் முடித்தால், அந்த சான்றிதழை நீங்கள் சுமார் 10 வருடங்களுக்கு பயன்படுத்த முடியும், போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல் சிறந்த முறையில் சிங்கப்பூர் செல்ல இது வழிவகுக்கும். Work Permitல் உங்களுக்கு வேலை கிடைப்பது எளிது. S Pass மற்றும் பிற வேலை பாஸ்க்களை விட இதற்கு ஆகும் செலவு என்பது மிகவும் குறைவு தான்.

Skilled Test முடித்து சிங்கப்பூர் வருவதில் என்னென்ன சிரமம் உள்ளது?

Skilled Test முடித்து வருவதன் மூலம் சிங்கப்பூரில் உங்களுக்கு ஆரம்ப நிலை வேலைகள் தான் கிடைக்கும், சொகுசாக வேலை பார்த்து பழகியவர்களுக்கு இது கொஞ்சம் கடினம் தான். குறைவான சம்பளத்தில் தான் நீங்கள் ஆரம்பத்தில் வேலைக்கு அமரத்தப்படுவீர்கள்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நீங்கள் கஷ்டப்பட்டால் அதன் பிறகு உங்கள் வாழ்க்கை சிங்கப்பூரில் நிச்சயம் முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகமில்லை. Skilled Test முடித்து சிங்கப்பூர் வந்து வேலை பார்க்கும் நேரத்தில் கூட நீங்கள் இங்கயே மேற்கொண்டு பல Skilled Testக்கு படிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Skilled Test எடுக்க என்ன செலவாகும்?

இன்றைய காலகட்டத்தில் இந்திய மதிப்பில் ஒரு Test எடுக்க குறைந்தது 2 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது இடத்திற்கு தகுந்தாற்போல மாறும். சென்னை போன்ற பெரு நகரங்களில் பல நம்பிக்கையான மையங்கள் இந்த Skilled Test பணிகளை செய்து தருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts