TamilSaaga

போலி நோட்டை வங்கியில் மாற்றிய நபர் – சிங்கப்பூரில் சிக்கிய சம்பவம்

சிங்கப்பூரில் போலி S $ 10,000 உருவப்படம் கோண்ட நோட்டுகளை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆணும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் நேற்று சனிக்கிழமை (செப். 25) தெரிவித்தனர்.

பிளாக் 449 க்ளெமென்டி அவென்யூ 3 -ல் உள்ள ஒரு வங்கியில் போலி எஸ் $ 10,000 நோட்டை வழங்கிய நபர் குறித்து கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் போலீசாருக்கு புகார் அறிக்கை வந்ததுள்ளது.

அந்த நபர் அந்த நோட்டை சிறிய மதிப்புடையதாக மாற்றுமாறு கோரியதாக போலீஸ் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

எனினும் வங்கி ஊழியர்கள் அந்த நோட்டு போலியானது என அடையாளம் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வணிக விவகாரத் துறை அதிகாரிகள் 58 வயதான நபரை கைது செய்தனர், பின்னர் 37 மற்றும் 33 வயதுடைய மற்ற இரண்டு பெண்களின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு போலி S $ 10,000 நாணயத்தாள், ஒரு சிவப்பு பாக்கெட் மற்றும் ஒரு போலி ஆவணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Related posts