TamilSaaga

சிங்கப்பூரில் லாரியில் பயணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் – வரப்பிரசாதமாய் வரும் புதிய Rules!

சிங்கப்பூரில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில், அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் கூரைகள் ஆகியவை கட்டாயமாக்கப்படும் என்று மாநில அமைச்சர் அமி கோர் இன்று புதன்கிழமை (மார்ச் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். “வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்பட எல்லா தொழிலாளர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க, நாம் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும்,” என்று போக்குவரத்து அமைச்சகத்தின் விநியோக குழு விவாதத்தின் போது டாக்டர் கோர் கூறினார்.

“இதே வேலையாத்தான் இருந்துருப்பான் போல” : சிங்கப்பூரில் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த ஆசாமி

“சிங்கப்பூரில் உள்ள பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு பருமனான உபகரணங்களுடன் ஒரு சிறிய அளவிலான தொழிலாளர்கள் குழுவினரையும் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இது “தொழிலாளர்களுக்கான பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கும், அவர்களின் உபகரணங்களை லாரிகளில் தனியாக எடுத்துச் செல்வதற்கும் செயல்பாட்டு ரீதியாக சவாலானது என்று அவர் கூறினார்.

மேலும் சிங்கப்பூரில் சுற்றுலா போன்ற பிற நடவடிக்கைகள் பெருந்தொற்றுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் போது உற்பத்தி மற்றும் கட்டுமானம், கடல்சார் மற்றும் Process துறைகளில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல போதுமான தனியார் பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்கள் இல்லை என்று தனியார் பேருந்து நடத்துநர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளனர் என்று ​​டாக்டர் கோர் மேலும் கூறினார். ஆகையால் பல சவால்கள் மற்றும் கவலைகளை கருத்தில் கொண்டு, போக்குவரத்து காவல்துறை (TP), நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) ஆகியவை தொழிலாளர் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

சிங்கப்பூர் Sex பயிற்சியாளர் : கருப்பையின் சிறப்பை உணர்த்தும் NFT-கள் விற்பனைக்கு – குவியும் மக்களின் பாராட்டு

ஆகையால் இனி அதிகபட்சமாக 3,500 கிலோ எடையுள்ள (MLW) அனைத்து லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும். தொழிலாளர்களை அழைத்த செல்வது மற்றும் பணியிடத்தில் வேலை பார்ப்பது போன்ற இரட்டை வேலைகளில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்களுக்கு அவர்களது முதலாளிகள் முறையான ஓய்வு நேரத்தை அளிக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் அனைத்து லாரிகளிலும் மழைக் கூரைகள் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts