TamilSaaga

“இது தான் நூதன முறையில் நடக்கும் திருட்டா” : சிங்கப்பூரில் பலே ஆசாமி கைது – ஆமா அப்படி என்ன செஞ்சாரு?

சிங்கப்பூரில் மூன்று தனித்தனி சமயங்களில் மூன்று Carousell (Carousell என்பது OLX போன்ற பயன்படுத்திய பொருட்களை பெற பயன்படும் ஒரு செயலி) விற்பனையாளர்களிடமிருந்து இ-ஸ்கூட்டர்களை திருடிய மற்றும் திருட முயன்ற 36 வயது நபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் குற்றவாளி, விற்பனையாளர்களிடம் இ-ஸ்கூட்டர்களை Test Drive செய்ய விரும்புவதாகவும், இதற்காக விற்பனையாளர் தனது “ரோலக்ஸ் வாட்சை” அவர்கள் வசம் வைத்துக்கொண்டு இந்த Test Drive-க்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதும் அந்த வாட்ச் 13,800 வெள்ளி மதிப்புள்ள வாட்ச் என்றும் அந்த விற்பனையாளர்களிடம் கூறியுள்ளார்.

அதன் பிறகு தான் தெரிந்தது அந்த ரோலக்ஸ் போலியானது என்று, அந்த குற்றவாளி தனது Test Drive-க்கு பிறகு அந்த விற்பனையாளர்களை காண திரும்பவும் செல்லவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று விற்பனையாளர்கள் முறையே 16, 17 மற்றும் 19 வயதுடையவர்கள். ஜனவரி 19 அன்று, குற்றவாளி விற்பனையாளர்களில் ஒருவரை அணுகி, Carousell-லில் 3,000 வெள்ளிக்கு பட்டியலிடப்பட்ட மின்-ஸ்கூட்டரை வாங்குவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக ஷின் மின் கூறினார். உடனடியாக அந்த விற்பனையாளர் தனது 16 வயது நண்பரிடம் அந்த ஒப்பந்தத்தை முடிக்க உதவுமாறு கேட்டார், ஏனெனில் அந்த நாளில் குறிப்பிட்ட அந்த விற்பனையாளர் தனது வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, விற்பனையாளரின் நண்பர் தனது மற்ற மூன்று நண்பர்களையும் அழைத்து கொண்டு புங்கோல் டிரைவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குற்றவாளியைச் சந்திக்கச் சென்றார். குற்றவாளி ஒரு தங்க நெக்லஸ் மற்றும் தங்க ரோலக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்ததாகவும், தன்னை ஒரு பெரிய பணக்காரன் என்றும், தனக்கு “பணம் ஒரு பிரச்சனையே இல்லை” என்றும் கூறியுள்ளார். மின்-ஸ்கூட்டரை பரிசோதிக்க தனது விருப்பத்தைத் தெரிவித்த பிறகு, அவர் தனது ரோலக்ஸ் கடிகாரத்தை விற்பனையாளரின் நண்பரிடம் உத்தரவாதமாக விட்டுவிட்டு Test Drive செய்ய சென்றுள்ளார். அந்த கடிகாரத்தின் மதிப்பு $ 13,800 என்றும் கூறியுள்ளார்.

ஆனால் குற்றவாளி “Test Drive” சென்ற பிறகு திரும்பி வரவில்லை, அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளிக்க அந்த ஆசாமியை தேடிவந்த போலீஸ் அந்த குற்றவாளி இதுபோன்று செய்வது இது முதல் முறையல்ல என்று கூறியுள்ளனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts