TamilSaaga

“போலீசாருக்கு 76 வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர்” : கோர்ட்டில் ஆஜர் – அதிக தண்டனைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் போலீஸ்காரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்திற்காக, இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 16) ஒருவர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிங்கப்பூர் வாழ் சீன நாட்டவரான சூ ஷூபே, (29 வயது) கடந்த ஜூலை 4ம் தேதியன்று இரண்டு முறை சிறப்பு காவலர் ஓங் ஷு ஹாங்கிற்கு 76 டாலர் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் நடைமுறைகள் புலனாய்வு பணியகம் (CPIB) வெளியிட்ட ஒரு அறிக்கையில் அந்த போலீஸ்காரர் குற்றவாளி அளித்த சலுகைகளை நிராகரித்தார் என்று குறிப்பிட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, அதிகாரி தன்னுடைய அடையாளத்தை குறித்து சோதனை நடத்த விரும்பாததால் சூ லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மற்றொரு சந்தர்ப்பத்தில், சூ அந்த காவலருக்கு 76 வெள்ளி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார், ஏனெனில் அவர் காவலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பியுள்ளார். இந்நிலையில் அதிகாரிகள் ஜூ-வின் அடையாளத்தை ஏன் சோதனை செய்தனர் என்பதை குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.

குற்றம் சட்டப்பட்டவருக்கு ஜாமீன் தொகை 7,000வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டது மற்றும் அவரது வழக்கு அக்டோபர் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டிற்கும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 1,00,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

Related posts