TamilSaaga

“காதலியின் மகளுடன் தகாத உறவு” : தந்தை என்று அழைத்த பெண்ணுக்கு நடந்த கொடுமை

சிங்கப்பூரில் 26 வயது இளைஞன் ஒருவர் தனது காதலியின் 14 வயது மகளுடன் நட்பு வைத்து கொண்டு அவளுடன் முறையற்ற பாலியல் உறவு கொள்ள தொடங்கியுள்ளார். ஒரு குடும்ப உறுப்பினரால் இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்த அந்த சிறுமி அந்த வாலிபரை “அப்பா” என்று அழைப்பதன் மூலம் அந்த இளைஞனை ஒரு தந்தையாக கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அந்த சிறுமி கர்மமுற்று கடுமையான வயிற்று வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த குற்றவாளிக்கு, இப்போது வயது 29, இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) அந்த குற்றவாளி மீது பாலியல் ரீதியாக ஊடுருவியதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அவர் அதை ஒப்புக்கொண்டார். மேலும் பல குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் GAG உத்தரவுகள் காரணமாக வழக்கில் தொடர்புடைய யாருடைய பெயரையும் நீதிமன்றம் வெளியிடவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயுடன் கடந்த 2015ம் ஆண்டு முதல் காதல் உறவு கொண்டிருந்ததாகவும், பின்னர் அவருடன் தங்கியதாகவும் நீதிமன்றம் கூறியது. அவரது தாயுடனான உறவின் போது அவர் பாதிக்கப்பட்டவருக்கு சுமார் ஒன்றரை வருடங்கள் நெருக்கமாக இல்லை என்றும், நீதிமன்றம் கூறியது. ஏனென்றால், அந்த பெண், 10 முதல் 12 வயதில் குடும்ப உறுப்பினரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 14, 2020 அன்று, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கடுமையான வயிற்று வலிக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அது அவரின் பிரசவ வழி என்று தெரியவந்தது. உடனடியாக இளம் வயது கர்ப்பம் குறித்து மருத்துவமனை, காவல்துறைக்கு தகவல் அளித்தது. பாதிக்கப்பட்ட பெண் அடுத்த நாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிறப்புச் சான்றிதழில் அந்த பெண் தன் குழந்தையின் தந்தை குறித்து எந்த தகவலும் குறிப்பிடவில்லை.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் நவம்பரில் தண்டனைக்காக நீதிமன்றத்திற்கு திரும்புவார்.

Related posts