கடந்த 2020ம் ஆண்டு சிங்கப்பூர் எல்லை சார்ந்து அரசு நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒருவர் தனது சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியான தொல்லைகொடுத்துள்ள சம்பவத்தில் தற்போது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஊழியர் தனது சக பெண் ஊழியருக்கு முதலில் WhatsApp மூலம் மெசேஜ் அனுப்பி அவருடைய உடல் குறித்த சில கொச்சையான விஷயங்களை பேசியுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணிற்கு கைகொடுப்பது போல சென்று அவர் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதே போல வேறொரு சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணின் பின் பகுதியை தொட்டும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண் அளித்த புகாரின் பேரில் இரண்டு ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11), 36 வயதான அந்த நபர், பாலியல் வன்கொடுமை குறித்து தன் மீது சுமத்தப்பட்ட 2 குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான GAG உத்தரவு காரணமாக அவனுடைய பெயரை வெளியிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் அவர்களது பணியிடத்தைப் பற்றிய விவரங்களும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
சிங்கப்பூர் எல்லையின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் செயல்படும் அரசு நிறுவனத்தில் தான் அந்த பெண் பணிபுரிந்து வருகின்றார். பாதிக்கப்பட்டவரின் மூத்த சக ஊழியர் தான் அந்த குற்றவாளி என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
துணை அரசு வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாரன் கூறுகையில், 2020 மார்ச் முதல் டிசம்பர் வரையில் அந்த பெண்ணுக்கு அந்த நபர் பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார் என்று கூறினார். 2020ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று அவர்கள் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்தபோது, பாதிக்கப்பட்டவர் தனது உடலைப் பற்றிய கருத்துக்களை இனி பேசவேண்டாம் என்று கூறியபோது, அந்த நபர் அப்பெண்ணை பின்னால் இருந்து தொட்டுள்ளார்.
அந்த பெண் விலகி, அலுவலகத்தை விட்டு வெளியேற முயற்சித்தபோது மீண்டும் அவரை தொட்டுள்ளார் அந்த ஆசாமி. சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த மனிதன் அந்த பெண் இருந்த மேசையை நோக்கி சென்று விடைபெறுகிறேன் என்று கூறி கைகொடுப்பதுபோல சென்று அந்த பெண்ணின் உடலை தடவியுள்ளான்.
இறுதியில் அந்த பெண் தனது Boyfriend மூலம் போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.