TamilSaaga

“சொந்த மகளை கூட விட்டுவைக்கவில்லை” : சிங்கப்பூரில் காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

சிங்கப்பூரில் ஒருவர் தனது மகளுக்கு அவரது ஒன்பது வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் அவரது மகளுக்கு அவ்வாறு செய்தபோது அவரது மனைவி ஒரே அறையில் துங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சிறுமிக்கு 11 வயது ஆனபோது பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி கர்ப்பமாகிவிடலாம் என்ற அச்சத்தில் தனது மகளுக்கு கருத்தடை மாத்திரைகளை வாங்கியபோது அவரது குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருடைய இந்த குற்றங்கள் “கொடூரமானது” என்று குறிப்பிட்டார்.

அந்த சிறுமியின் அடையாளத்தை பாதுகாக்கும் பட்சத்தில் பெயரிட முடியாத அந்த 45 வயதான நபருக்கு இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 14) 21 ஆண்டுகள் சிறை மற்றும் 24 பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு பாலியல் பலாத்காரம் மற்றும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றங்களை ஒப்புக்கொண்டார். மேலும் இதுபோன்ற எட்டு குற்றச்சாட்டுகள் தீர்ப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த நபர் கடந்த 2007ல் சீனாவில் தனது மனைவியை மணந்தார் என்று நீதிமன்றம் கூறியது. அதே ஆண்டின் பிற்பகுதியில், அவரது மனைவி பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை பெற்றடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு தற்போது வயது 14.

அடுத்த சில ஆண்டுகளில் அந்த குடும்பம் சிங்கப்பூர் வந்து நிரந்தர குடியுரிமையைப் பெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு 2015ல் ஒரு மகன் பிறந்தார். இதனையடுத்து நான்கு பேர் கொண்ட இந்த குடும்பம் டம்பைன்ஸில் நான்கு அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் வசித்து வந்தது. அவர்கள் பொதுவாக ஒரே அறையில் பங்க் படுக்கை மற்றும் Double படுக்கையை பயன்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் பங்க் படுக்கையின் கீழ் தளத்தில் தூங்குவது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. அவளுடைய பெற்றோரும் சகோதரனும் இரட்டை படுக்கையில் தூங்கினார்கள்.

இதனையடுத்து அந்த குற்றவாளி கடந்த 2017ல் தனது மகளுக்கு ஒன்பது வயது இருக்கும்போதே பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். தந்தையின் செயல்கள் பிடிக்காத அந்த பச்சிளம் சிறுமி அவரிடம் இருந்து விலகியே இருந்தால். ஆனால் அக்டோபர் 2018ல் அந்தப் சிறுமிக்கு 11 வயதை எட்டியபோது அவளுடைய தந்தை அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். முதல் முறை அவரது முயற்சி வெற்றிபெறவில்லை என்றபோதும் இரண்டாவது முறை அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபோல பலமுறை நடக்க ஒருமுறை ஆணுறை இல்லாமல் அவளை பலாத்காரம் செய்ய, பயந்த அந்த தந்தை, மகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் இந்த விஷயம் அன்னையின் காதுக்கு செல்ல, போலீசில் புகார் அளிக்கப்பட்டு தற்போது அந்த அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts