TamilSaaga

அப்போ பெண் தோழியின் வீட்டுக்கு செல்ல இதுதான் காரணமா? – இளைஞருக்கு சிறை தண்டனை

சிங்கப்பூரில் Tinder எனப்படும் டேட்டிங் செயலி மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்தி அதன் பிறகு அந்த பெண்ணின் வீட்டுச்சாவியை இரகசியமாக நகலெடுத்து. பின்னர் அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து 40,000 வெள்ளி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை திருடிய நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான பிலிப்பினோ மோரேனோ நினோ ஜஸ்னர் ஜஷுவா தகுவிபாவ் தனது குற்றங்களுக்காக இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 22 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருட்டு மற்றும் போலி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சப்பட்டுள்ளது. மோரேனோ, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை கடந்த 2015ம் ஆண்டு “டிண்டரில்” சந்தித்தாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அவர்கள் சில வருடங்கள் பழகியுள்ளார். இதனையடுத்து மொரேனோ 2018ல் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அந்த வீட்டு சாவியை அவருக்கு தெரியாமல் நகலெடுத்துள்ளார்.

செப்டம்பர் 2019ல், இந்த ஜோடி பிரிந்தது. இதனையடுத்து மோரேனோ பாதிக்கப்பட்டவருக்கு அவளது சாவியைத் திருப்பித் அளித்துள்ளார். ஆனால் அவர் தனக்காக நகலெடுத்த சாவிகளை அவர் அந்த பெண்ணிடம் அவர் திரும்ப அளிக்கவில்லை.

குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதி தனது சிறை தண்டனையை தொடங்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

Related posts