சிங்கப்பூரில் சென்டோசாவில் உள்ள ஒரு மதுக்கடைக்குள் நுழைய, தன்னுடைய Trace Together செயலியில் தடுப்பூசி போட்ட நிலையைப் பயன்படுத்த மற்றொரு நபரை அனுமதித்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த கிரண் சிங் ரக்பீர் சிங் என்ற அந்த 37 வயது நபர் மீது, இன்று புதன்கிழமை (டிசம்பர் 29) ஒரு பொது நோக்கத்தின் மூலம் ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூரில் குடிபோதையில் ஓட்டுநர் மற்றும் போலீசாரை திட்டிய “இந்தியர்”
குற்றப்பத்திரிகைகளின்படி, அவர் உதயகுமார் நல்லதம்பி என்ற அந்த நபரை தான் தன்னுடைய Trace Together செயலியை பயன்படுத்தி சைலோசோ கடற்கரையில் உள்ள கோஸ்ட்ஸ் என்ற பார் உள்ளே நுழைய அனுமதித்துள்ளார். அவருடைய இந்த செயலால், பாரில் இருந்த ஊழியர் ஒருவர், அந்த 65 வயதான உதயகுமாரை, கடந்த செப்டம்பர் 9ம் தேதி மாலை 6 மணியளவில் உணவருந்துவதற்கு மதுக்கடைக்குள் நுழைய அனுமதித்துள்ளார்.
குற்றப்பத்திரிகையின் படி, சிங்கின் செயல் “ஒரு நபரின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்” என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றம் எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை ஆரம்ப கட்ட குற்றவியல் ஆவணங்கள் தற்போது வெளிப்படுத்தவில்லை. மேலும் இன்னொருவருடைய செயலியை பயன்படுத்தி பாருக்கு சென்ற உதயகுமார் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிங்குக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.