SINGAPORE: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 4) காலை Kallang Riverside பகுதியில் ஜாக்கிங்கில் ஈடுபட்ட நபர் ஒருவரை நீர் நாய் ஒன்று கடித்துள்ளது.
அவர் ஜாக்கிங்கில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சுமார் 30 நீர்நாய்கள் வருவதைக் கண்டு உற்சாகமடைந்தார். இதுகுறித்து தனது முழு பெயரை வெளியிட விரும்பாத 52 வயதான ஆங் கூறுகையில், “நான் இத்தனை நீர்நாய்களை ஒரே இடத்தில் பார்த்ததில்லை. இதனால், அவர்களை சற்று தூரம் இடைவெளிட்டு பின்தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, ஒரு வயதான நீர்நாய் ஒன்று என் மேல் பாய்ந்து கடித்துவிட்டது. அவற்றை பின்தொடர்ந்து சென்ற போது, ஒரு நீர்நாய் மட்டும் என் பக்கம் திரும்பியதும் நான் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், வெளியில் பயம் இல்லாதது போல் காட்டிக் கொண்டேன். எதுவும் நடக்காது என்று நம்பினேன். அது என்னைக் கடிக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
அவரது காலில் இரத்தப்போக்கு இருந்தபோதிலும், அப்பகுதியில் வசிக்கும் திரு ஆங், ஆம்புலன்ஸை அழைக்கும் அளவுக்கு கடுமையான காயம் என்று நினைக்கவில்லை. அவர் அருகிலுள்ள கழிப்பறையில் இரத்தம் வழிவதைக் கழுவினார். பின்னர் Bugis பகுதியில் உள்ள Raffles மருத்துவமனைக்குச் சென்று சோதித்தார்.
அங்கு அவருக்கு சோதனை எடுத்து பார்த்த போது, காயம் சற்று ஆழமாக இருந்தது தெரியவந்தது. இதனால், 5 நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் என்ன பியூட்டி என்றால், நீர் நாய்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் தன் குடும்பத்தை இவர் எச்சரித்துக் கொண்டே இருப்பாராம். ஆனால், 30க்கும் மேற்பட்ட நீர்நாய்களை பார்த்த பரவசத்தில் பின்னால் சென்று கடி வாங்கி, எனது அறிவுரைகளை நானே காற்றில் பறக்கவிட்டுவிட்டேன்” என்று ஆங் கூறியுள்ளார்.