TamilSaaga

சிங்கப்பூரில் ஒரு நபருக்கு கத்தி குத்து.. குற்றவாளியை பிடித்த போலீஸ் – முழு விவரங்கள்

சிங்கப்பூரில் யிஷூன் தெரு 31 ல் கடந்த சனிக்கிழமை (அக் 2) மற்றொரு நபரை கத்தியால் குத்தியதாக 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு 11.40 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாக போலீசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

மார்பு மற்றும் தோள்பட்டையில் காயமடைந்த பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.

போலீசார் வருவதற்கு முன்பே தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார்.

உட்லேண்ட்ஸ் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரின் அடையாளத்தை நிறுவி விசாரணைக்குப் பிறகு குற்றம் நடந்த ஆறு மணி நேரத்தில் அவரை கைது செய்தனர்.

ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயப்படுத்தியதாக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts