சிங்கப்பூரில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 24 வயது சிங்கப்பூரைச் சேர்ந்த தியோ யாவ் ஹாங் என்பவருக்கு ஒரு வருடம் மற்றும் 11 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை சந்திப்பதற்கு முன்பு, கிராப் டிரைவர் மற்றும் கிடங்கு உதவியாளராக பணிபுரிந்த தியோ, MiChat என்ற ஆன்லைன் ஆப் மூலம் அவர் சந்தித்த ஒரு 14 வயது பெண்ணுடன் உறவு கொண்டிருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்களின்படி குறைப்படுகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2019ல், தியோ தனது காதலி மற்றொரு ஆணுடன் உடலுறவு கொண்டதை கண்டுபிடித்துள்ளார். ஏமாற்றப்பட்ட அவர் மீண்டும், கடந்த ஜூன் 2020ல் MiChat செயலியை பயன்படுத்த முடிவுசெய்துள்ளார். அந்த சூழலில் தான் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த நபரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். அந்த சிறுமி மைனர் என்பதால் அவருடைய பெயரை குறிப்பிட நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்டவருடனான அவரது உறவை “Friends with Benefits” என்று தியோ விவரித்தார், அதே நேரத்தில் அந்த சிறுமியின் வயதை அவர் பொருட்படுத்தவில்லை.
இதனையடுத்து கடந்த ஜூன் 28, 2020 அன்று, தியோ பாதிக்கப்பட்டவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார், மற்றும் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவள் ஒப்புக் கொண்டு தன் வீட்டு முகவரியை வழங்க, பின்னர் அவர்கள் அந்த சிறுமியின் பிளாட் வெற்றிட தளத்தில் சந்தித்தனர். அவர்கள் சந்தித்தது அதுவே முதல் முறை என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர் தனது மேல்நிலைப் பள்ளி சீருடை அணிந்திருப்பதை தியோ அப்போது கண்டுள்ளார்.
அவர்கள் அரட்டையடிக்கும் நேரத்தில், அந்த சிறுமியிடம் உடலுறவு வைத்துக்கொள்வது பற்றி கேட்க அந்த சிறுமியும் ஒப்புக்கொண்டு ஒன்றிணைந்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அருகிலுள்ள படிக்கட்டு தரையிறக்கத்திற்குச் சென்று ஒருவருக்கொருவர் பாலியல் செயல்களைச் செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் அடிக்கடி சந்தித்து உறவுகொண்டு நிலையில் ஒரு நாள் அந்த சிறுமியின் தந்தியிடம் கையும் களவுமாக இருவரும் மாட்டிக்கொண்டனர். அதன் பிறகு அந்த சிறுமியின் தாய் தந்தை போலீசில் புகார் அளிக்க அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.