TamilSaaga

“ஏழ்மையின் வலி எனக்குத் தெரியும்” – சிங்கப்பூரில் டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவளிக்கும் லீ

சிங்கப்பூர் மட்டுமன்றி உலகின் பல நாடுகளில் இந்த கொரோனா கிருமி தொற்று நோய் பரவல் காரணமாக பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து உள்ளது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் சிங்கப்பூரில் டூரியன் பழ விற்பனையாளர் ஒருவர் மக்களுக்கு இலவசமாக உணவு அளித்து வரும் சம்பவம் பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் டூரியன் பழத்தின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 31 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த லூயிஸ் லீ வியாபாரம் சிறப்பாக உள்ளது, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நோய் பரவல் காரணமாக பலரது வாழ்க்கை புரட்டிப்போடப்பட்டுள்ள இந்த நேரத்தில் எனக்கு கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்பை நினைத்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சிரமப்படும் டாக்ஸி ஓட்டுனர்கள், மலேசியர்கள் தம்மிடம் வந்து இலவச உணவை பெற்றுக் கொள்ளலாம் என்று தனது முகநூலில் மூலம் அறிவித்துள்ளார். தினமும் 100, 150, 200, 250 என்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு முடியுமோ அத்தனை உணவு பொட்டலங்களை மற்றும் பானங்களை அவர் வழங்கி வருகிறார்.

பிரபல CNA செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், வறுமையில் வளர்ந்த எனக்கு அவர்களின் வலி புரியும் என்று கூறியுள்ளார். தற்போது லீ-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Related posts