சிங்கப்பூருக்கு வேலைக்காக தினசரி வரும் பல மலேசிய தொழிலாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மீண்டும் மலேசியா செல்லமுடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவித்து வருகின்றனர். எல்லை கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல் தேவைகள், என்று பல கட்டுப்பாடுகள் அவர்கள் தங்கள் வீடு திரும்புவதை மிகவும் கடினமாக்கியுள்ளது.
இதற்கிடையில், அவர்கள் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் மாற்று விகிதத்தில் கூடுதல் வாழ்க்கைச் செலவுகளுடன் போராட வேண்டிய நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல மலேசியாவில் தற்போது வசிக்கும் சில சிங்கப்பூரர்கள் இதேபோன்ற இக்கட்டான நிலையில் தற்போது உள்ளனர்.
எல்லை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் போது அடுத்த மாதம் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள். எல்லை கட்டுப்பாடுகள் விரைவில் சரியடைந்தால் மட்டுமே அவர்களால் ஒரு சகஜமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், அனைத்து மலேசியர்களும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.