சிங்கப்பூரில் உள்ள ‘மாலா’ உணவகத்தின் உரிமையாளருக்கு இன்று (ஜூலை 15) 9,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடையின் ஷட்டரை மூடி அதன் பின்னால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கூடி மது அருந்த அனுமதித்த குற்றத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சன் வென்கியன் என்ற 39 வயதுள்ள சிங்கப்பூரார் ஒருவர், உரிமம் இல்லாமல் மதுபானம் வழங்கியதற்காகவும், மேலும் தனது உணவகத்தில் அரசு குறிப்பிட்ட அளவான ஐந்து நபர்கள் என்ற அளவை தாண்டி அதிக வாடிக்கையாளர்களை அனுமதித்தாகவும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் உரிமம் இல்லாமல் தனது உணவகத்தில் மதுபானம் வழங்கியதற்காக, 20,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். நாட்டில் தற்போது நடப்பில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சன், இரண்டு 21 மாத குழந்தைகள் உள்ள ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தை நிர்வகித்து வருவதால் அவர் அபராதத்தை தவணை முறையில் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.